திங்கள், 26 அக்டோபர், 2020

இயல் 2, வினைமுற்று

 வினைமுற்று



சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. மாடு வயலில் புல்லை மேய்ந்தது.- இத்தொடரிலுள்ள வினைமுற்று

அ) மாடு 

ஆ) வயல்

இ) புல்

ஈ) மேய்ந்தது

விடை: ஈ) மேய்ந்தது


2. பின்வருவனவற்றுள் இறந்தகால வினைமுற்று ---

அ) படித்தான்

ஆ) நடக்கிறான் 

இ) உண்பான்

ஈ) ஓடாது

விடை: ஈ) ஓடாது


3. பின்வருவனவற்றுள் ஏவல் வினைமுற்றுச் சொல்

அ) செல்க 

ஆ) ஓடு

இ) வாழ்க 

ஈ) வாழிய

விடை: ஆ) ஓடு


சிறுவினா

1. வினைமுற்று என்றால் என்ன?

வினைமுற்று

மலர்விழி எழுதினாள். கண்ணன் பாடுகிறான். மாடு மேயும்,

இத்தொடர்களில் எழுதினாள், பாடுகிறான், மேயும் ஆகிய சொற்களைக் கவனியுங்கள்.

இச்சொற்களில் பொருள் முழுமை பெற்று விளங்குகிறது. இவ்வாறு பொருள் முற்றுப் பெற்ற வினைச்சொற்களை முற்றுவினை அல்லது வினைமுற்று என்பர். வினைமுற்று ஐந்து பால், மூன்று காலம், மூன்று இடம் ஆகிய அனைத்திலும் வரும்

2. தெரிநிலை வினைமுற்று எவற்றைக் காட்டும்?

தெரிநிலை வினைமுற்று

ஒரு செயல் நடைபெறுவதற்குச் செய்பவர், கருவி. நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகிய ஆறும் முதன்மையானவை ஆகும். இவை ஆறும் வெளிப்படுமாறு அமைவது தெரிநிலை வினைமுற்று எனப்படும்.


3. வியங்கோள் வினைமுற்று விகுதிகள் யாவை?

வியங்கோள் வினைமுற்று விகுதிகள்

க, இய, இயர், அல் என வரும்.

(எ.கா.) வாழ்க, ஒழிக, வாழியர், வாரல்

4, ஏவல் வினைமுற்றுக்கும் வியங்கோள் வினைமுற்றுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் யாவை?

ஏவல் வினைமுற்றுக்கும் வியங்கோள் வினைமுற்றுக்கும் உள்ள வேறுபாடுகள்

ஏவல் வினைமுற்று

  • முன்னிலையில் வரும்.
  • ஒருமை, பன்மை வேறுபாடு உண்டு. 
  • கட்டளைப் பொருளை மட்டும் உணர்த்தும். 
  • விகுதி பெற்றும் பெறாமலும் வரும்.

வியங்கோள் வினைமுற்று

  • இருதிணை, ஐம்பால், மூவிடங்களுக்கும் பொதுவாய் வரும்.
  • ஒருமை பன்மை வேறுபாடு இல்லை.
  • வாழ்த்துதல், வைதல், விதித்தல்,வேண்டல் ஆகிய பொருள்களை உணர்த்தும்.
  • விகுதி பெற்றே வரும்.

இயல் 2, நிலம் பொது

 

நிலம் பொது

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. செவ்விந்தியர்கள் நிலத்தைத் ______________மதிக்கின்றனர்.

அ) தாயாக 

ஆ) தந்தையாக 

இ) தெய்வமாக 

ஈ) தூய்மையாக

விடை: அ) தாயாக


2. 'இன்னோசை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) இன் + ஓசை

ஆ) இனி + ஓசை

இ) இனிமை + ஓசை

ஈ) இன் + னோசை

விடை: இ) இனிமை + ஓசை


3. பால் + ஊறும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ) பால் ஊறும் 

ஆ) பாலூறும் 

இ) பால்லூறும் 

ஈ) பாதாறும்

விடை: ஆ) பாலூறும்


தொடரில் அமைத்து எழுதுக.

1. வேடிக்கை : ஆபத்தில் சிக்கியவருக்கு வேடிக்கை பார்க்காமல் உதவி செய்ய வேண்டும்.

2. உடன்பிறந்தார் : உலகோர் அனைவரையும் உடன்பிறந்தாராக எண்ண வேண்டும்.


குறுவினா


1. விலைகொடுத்து வாங்க இயலாதவை எனச் சியாட்டல் கூறுவன யாவை?

பூமிக்கு அணுக்கமாக உள்ள வானத்தையும் காற்றின் தூய்மையையும் நீரின் உயர்வையும் யாராலும் விலைகொடுத்து வாங்க இயலாது என்கிறார், சியாட்டல்.


2. நிலத்திற்கும் செவ்விந்தியர்களுக்கும் உள்ள உறவு யாது?

எங்கள் கால்களைத் தாங்கி நிற்கும் இந்த நிலமானது எம்முடைய பாட்டன்மார்கள் எரிந்த சாம்பலால் ஆனதாகும். இந்நிலமே எங்கள் தாயாகும்; எமது உறவுமுறையாரின் வளமான வாழ்வால் ஆனதே இந்நிலமாகும்.

3. எதனைத் தம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனச் சியாட்டல் கூறுகிறார்?

இப்பகுதியில் உள்ள எருமைகள் கொல்லப்படுவதையும் எங்குப் பார்த்தாலும் மக்கள் நடமாட்டம் அதிகரிப்பதையும் தொன்மையான மலைகளை மறைத்துத் தொலைபேசிக்கம்பிகள் பெருகி வருவதையும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.


சிறுவினா


1. நீர்நிலைகள் குறித்துச் சியாட்டல் கூறியுள்ளவற்றை எழுதுக.

  1. ஏரிகளில் பிரதிபலிக்கும் நினைவு எச்சங்கள், எம் மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளை நினைவுகூர்பவை. இந்த நீரின் முணுமுணுப்புகள் எம் பாட்டன்மார்களின் குரல்களேயாகும்.
  2. இந்த ஆறுகள் யாவும் எம் உடன்பிறந்தவர்கள். இவர்கள்தாம் எமது தாகத்தைத் தீர்க்கிறார்கள். எம்மக்களின் தோணிகளையும் இவர்களே சுமந்து செல்கின்றனர்; குழந்தைகளுக்கு உணவளிக்கின்றனர். 
  3. இங்குள்ள ஓடைகளிலும் ஆறுகளிலும் ஓடும் வனப்புமிகு நீரானது வெறும் தண்ணீரன்று; எமது மூதாதையரின் குருதியாகும். இந்நிலம் புனிதமானது.


2. எவையெல்லாம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை என்று சியாட்டல் கூறுகிறார்?

  1. எமது மக்கள், இந்தப் பூமியை எப்பொழுதும் மறப்பதேயில்லை. ஏனெனில் இதுவே எமக்குத் தாயாகும். நாங்கள் இந்த மண்ணுக்கு உரியவர்கள்; இந்த மண்ணும் எமக்குரியதாகும். 
  2. இங்குள்ள நறுமணம் மிகுந்த மலர்கள் யாவும் எமது சகோதரிகள். மான்கள், குதிரைகள், கழுகுகள் போன்ற அனைத்தும் எமது சகோதரர்கள்.  
  3. இந்த ஆறுகள் யாவும் எம் உடன்பிறந்தவர்கள்.  மலை முகடுகள், பசும்புல்வெளிகளின் பனித்துளிகள், மட்டக் குதிரைகளின் உடல் சூட்டின் இதமான கதகதப்பு போன்றவையும் இங்குள்ள மனிதர்கள் எல்லாமும் ஒரே குடும்பம்.

நெடுவினா

தாய்மண் மீதான செவ்விந்தியர்களின் பற்றுக் குறித்துச் சியாட்டல் கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக.

தாய்மண் மீதான செவ்விந்தியர்களின் பற்று

  1. இந்தப் பூமியின் ஒவ்வொரு துகளும் எம் மக்களுக்குப் புனிதமானதாகும். கூடவே மின்னும் ஒளியுடைய ஒவ்வொரு ஊசியிலையும் எல்லாக் கடற்கரைகளும் கருமரங்களில் தவழும் பனித்துளிகளும் இன்னிசை எழுப்பித் திரியும் பூச்சி வகைகளும் எம் மக்களின் நினைவிலும் வாழ்விலும் மிகவும் புனிதமானவை. பாலூறும் மரத்திலிருந்து ஒழுகும் திரவம்கூட, செவ்விந்தியர்களின் நினைவுகளைச் சுமந்து நிற்கின்றது.
  2. எமது மக்கள், இந்தப் பூமியை எப்பொழுதும் மறப்பதேயில்லை. ஏனெனில் இதுவே எமக்குத் தாயாகும். நாங்கள் இந்த மண்ணுக்கு உரியவர்கள்; இந்த மண்ணும் எமக்குரியதாகும். இங்குள்ள நறுமணம் மிகுந்த மலர்கள் யாவும் எமது சகோதரிகள். மான்கள், குதிரைகள், கழுகுகள் போன்ற அனைத்தும் எமது சகோதரர்கள். இந்த ஆறுகள் யாவும் எம் உடன்பிறந்தவர்கள். மலை முகடுகள், பசும்புல்வெளிகளின் பனித்துளிகள், மட்டக் குதிரைகளின் உடல் சூட்டின் இதமான கதகதப்பு போன்றவையும் இங்குள்ள மனிதர்கள் எல்லாமும் ஒரே குடும்பம்.
  3. ஏரிகளில் பிரதிபலிக்கும் நினைவு எச்சங்கள், எம் மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளை நினைவுகூர்பவை. இந்த நீரின் முணுமுணுப்புகள் எம் பாட்டன்மார்களின் குரல்களேயாகும்.
  4. இந்த ஆறுகள் யாவும் எம் உடன்பிறந்தவர்கள். இவர்கள்தாம் எமது தாகத்தைத் தீர்க்கிறார்கள். எம்மக்களின் தோணிகளையும் இவர்களே சுமந்து செல்கின்றனர்; குழந்தைகளுக்கு உணவளிக்கின்றனர். இங்குள்ள ஓடைகளிலும் ஆறுகளிலும் ஓடும் வனப்புமிகு நீரானது வெறும் தண்ணீரன்று; எமது மூதாதையரின் குருதியாகும். இந்நிலம் புனிதமானது 
  5. எம் மக்கள் யாவரும் அமைதியான குளத்தின் முகத்தை முகந்து வரும் தென்றலின் இன்னோசையையும் நடுப்பகலில் பெய்யும் மழையால் எழும் மண்வாசனையையும் தேவதாரு மரத்திலிருந்து பறக்கும் இலைகளின் மணத்தையும் நுகர்வதை விரும்புபவர்கள்.
  6. நாங்கள் காற்றை மிகவும் மதித்துப் போற்றுபவர்கள். விலங்குகள், மரங்கள், மனிதர்கள் உள்ளிட்ட யாவற்றுக்கும் சுவாசித்தல் பொதுவானது. பொதுவான ஒரு காற்றையே இவையாவும் சுவாசிக்கின்றன.  
  7. எங்கள் கால்களைத் தாங்கி நிற்கும் இந்த நிலமானது எம்முடைய பாட்டன்மார்கள் எரிந்த சாம்பலால் ஆனதாகும். இந்நிலமே எங்கள் தாயாகும்; எமது உறவுமுறையாரின் வளமான வாழ்வால் ஆனதே இந்நிலமாகும்.  
  8. இந்நிலமானது கடவுளும் மதிக்கக்கூடிய ஒன்றாகும். ஆகவே, இதற்குக் கெடுதல் செய்வதென்பது அதனைப் படைத்த கடவுளை அவமதிக்கும் செயலாகிவிடும்.

இயல் இரண்டு, கோணக்காத்துப் பாட்டு

இயல் 2

கோணக்காத்துப் பாட்டு


சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. வானில் கரு_________தோன்றினால் மழை பொழியும் என்பர்.

அ) முகில் 

ஆ) துகில் 

இ) வெயில்

ஈ) கயல்

விடை:அ) முகில்


2. முறையான உடற்பயிற்சியும் சரிவிகித உணவும் -----யும் ஓட்டிவிடும்.

அ) பாலனை

ஆ) காலனை 

இ) ஆற்றலை

ஈ) நலத்தை

விடை: ஆ) காலனை


3. 'விழுந்ததங்கே' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) விழுந்த + அங்கே

ஆ) விழுந்த + ஆங்கே

இ) விழுந்தது + அங்கே 

ஈ) விழுந்தது + ஆங்கே

விடை: இ) விழுந்தது + அங்கே


4. 'செத்திறந்த' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) செ + திறந்த

ஆ) செத்து + திறந்த

இ) செ + இறந்த

ஈ) செத்து + இறந்த

விடை: ஈ) செத்து + இறந்த


5. பருத்தி + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ) பருத்தி எல்லாம்

ஆ) பருத்தியெல்லாம்

இ) பருத்தெல்லாம்

ஈ) பருத்திதெல்லாம்

விடை: ஆ) பருத்தியெல்லாம்

குறுவினா

1) கப்பல் கவிழ்ந்ததற்குக் காரணமாகக் கோணக்காத்துப் பாட்டு கூறுவது யாது?

எமனைப் போல் வந்த பெருமழையினாலும் சூழல்க்காற்றினாலும் புயல் அடித்ததால் கப்பல் கவிழ்ந்தது.

2) புயல்காற்றினால் தொண்டைமான் நாட்டில் ஏற்பட்ட அழிவு யாது?

தொண்டைமான் நாட்டில் சிறப்பாக வைக்கப்பட்ட மரங்கள் அனைத்தும் சின்னாபின்னமாக ஒடிந்து விழுந்தன.

3) கொல்லிமலை பற்றிப் பாடல் கூறும் செய்தி யாது?

சித்தர்கள் வாழும் கொல்லி மலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் புயல் அடித்தது.

சிறுவினா

1) புயல் காற்றினால் மரங்களுக்கு ஏற்பட்ட நிலைகளாகப் பாடல் குறிப்பிடும் கருத்துகள் யாவை?

  1. வாங்கல் என்னும் ஊரில் அழகாக வைக்கப்பட்ட தென்னம்பிள்ளைகள் எல்லாம் வீணாயின. 
  2. தொண்டைமான் நாட்டில் சிறப்பாக வைக்கப்பட்ட மரங்கள் அனைத்தும் சின்னாபின்னமாக ஒடிந்து விழுந்தன.

2) கோணக்காற்றால் வீடுகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் யாவை?

  1. திரண்டு எழுந்த மேகங்களால் உருவான காற்று வேகமாக அடித்ததால் பெரியவீடுகளின் கூரைகள் எல்லாம் மொத்தமாகப் பிரிந்து சரிந்தன.
  2. அழகிய சுவர்களை உடைய மாடிவீடுகள் அடியோடு விழுந்தன.

ஞாயிறு, 25 அக்டோபர், 2020

இயல் 1, எழுத்துக்களின் பிறப்பு

 எழுத்துக்களின் பிறப்பு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.


1. இதழ்களைக் குவிப்பதால் பிறக்கும் எழுத்துகள்

அ) இ, ஈ

ஆ) உ, ஊ

இ) எ, ஏ

ஈ) அ, ஆ

விடை:ஆ)உ,ஊ


2. ஆய்த எழுத்து பிறக்கும் இடம்

அ) மார்பு 

ஆ) கழுத்து 

இ) தலை

ஈ) மூக்கு

விடை:இ) தலை


3. வல்லின எழுத்துகள் பிறக்கும் இடம்

அ) தலை

ஆ) மார்பு 

இ) மூக்கு 

ஈ) கழுத்து

விடை:ஆ) மார்பு


4. நாவின் நுனி அண்ணத்தின் நுனியைப் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள்

அ) க்,ங்

ஆ)ச், ஞ்

இ) ட், ண் 

ஈ) ப், ம்

விடை:அ)க்,ங்


5. கீழ் இதழும் மேல்வாய்ப்பல்லும் இணைவதால் பிறக்கும் எழுத்து

அ) ம்

ஆ) ப்

இ) ய்

ஈ) வ்

விடை: ஈ) வ்


பொருத்துக.


1) க், ங் - அ) நாவின் இடை, அண்ணத்தின் இடை


2) ச், ஞ் - ஆ)நாவின் நுனி, மேல்வாய்ப்பல்லின் அடி


3) ட், ண் - இ) நாவின் முதல், அண்ணத்தின் அடி


4) த், ந் - ஈ) நாவின் நுனி, அண்ணத்தின் நுனி


விடை:

1-ஈ, 2-அ, 3-ஈ, 4-இ

சிறுவினாக்கள்

1). எழுத்துக்களின் பிறப்பு என்றால் என்ன?

உயிரின் முயற்சியால் உடலின் உள்ளிருந்து எழும் காற்றானது மார்பு, தலை, கழுத்து, மூக்கு ஆகிய நான்கு இடங்களுள் ஒன்றில் பொருந்தி, இதழ், நாக்கு, பல், மேல்வாய் ஆகிய உறுப்புகளின் முயற்சியினால் வேறுவேறு ஒலிகளாகத் தோன்றுகின்றன. இதனையே எழுத்துகளின் பிறப்பு என்பர்.


2). மெய்யெழுத்துக்கள் எவற்றை இடமாகக் கொண்டு பிறக்கின்றன?


  1. வல்லின மெய் எழுத்துகள் ஆறும் மார்பை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
  2. மெல்லின மெய் எழுத்துகள் ஆறும் மூக்கை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
  3. இடையின மெய் எழுத்துகள் ஆறும் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.


3). லகர, ளகர, ழகர மெய்களின் முயற்சிப் பிறப்பு பற்றி எழுதுக.

  1. ழ் - இது மேல்வாயை நாக்கின் நுனி வருடுவதால் பிறக்கின்றது.
  2. ல் - இது மேல்வாய்ப் பல்லின் அடியை நாக்கின் ஓரங்கள் தடித்து நெருங்குவதால் பிறக்கிறது.
  3. ள் - இது மேல்வாயை நாக்கின் ஓரங்கள் தடித்துத் தடவுதலால் பிறக்கிறது.

இயல் 1,சொற்பூங்கா

சொற்பூங்கா


தமிழில் ஓரெழுத்து ஒருமொழிகளின் பெருக்கம் குறித்து இளங்குமரனார் கூறும் செய்திகளைத் தொகுத்து எழுதுக.

ஓரெழுத்து ஒரு மொழிகளின் பெருக்கம்


  1. 'பூ' என்பது ஓரெழுத்து ஒரு மொழி. 'கா' என்பதும் ஓரெழுத்து ஒரு மொழி. இவை இரண்டையும் இணைத்துப் 'பூங்கா' எனக் கலைச்சொல் ஆக்கி வைத்துள்ளனர். 
  2. 'யா' என்பது வினா. யாது, யாவர், யாவன், யாவள், யாங்கு, யாண்டு, யார், யாவை என்றெல்லாம் வினாவுவதற்கு முன் வந்து நிற்கும் எழுத்து 'யா'தான்.
  3. ஆ, மா, நீ, மீ, பீ, ஊ, சே, தே இவ்வாறான ஓரெழுத்து ஒரு மொழிகளும் உள்ளன. பூங்கா இணைந்தது போல ஆ, மா என்பவை இணைந்து 'ஆமா' என்னும் கலைச்சொல் வடிவம் கொண்டமை பண்டைக் காலத்திலேயே உண்டு. காட்டுப் பசுவுக்கு 'ஆமா' என்று பெயர். 'மா' என்பதும் ஓரெழுத்து ஒரு மொழிகளுள் ஒன்று.
  4. நாட்டிலுள்ள பெருமக்கள் பெரிதும் கூடும் அவையை 'மாநாடு' என்கிறோம். பல குறுநிலங்களை உள்ளடக்கிய பெருநிலத்தை 'மாநிலம்' என்கிறோம். உலகப் பெரும் பரப்பையும் இயக்கத்தையும் சுட்ட 'மாஞாலம்' என்கிறோம். இவ்வாறெல்லாம் இயல்பாக 'மா' என்னும் ஓரெழுத்து ஒருமொழி மக்கள் வழக்கிலும் இலக்கிய வழக்கிலும் திகழ்கின்றது. மாநிறம் என 'மாந்தளிர்' நிறத்தை ஒப்புமை காட்டி உரைப்பது பெருவழக்கு. 'மா' என்பது விலங்கையும் குறிக்கும். அரிமா, பரிமா, நரிமா, வரிமா, கரிமா என்றெல்லாம் வந்து விலங்கினப் பெயராகி நிற்கின்றது.
  5. 'ஈ' என்னும் பொதுப் பெயர் ஓயாது ஒலி செய்யும் ஒலிக்குறிப்பைக் காட்டி நிற்கிறது. மாட்டு ஈ, தேன் ஈ எனப் பகுத்து வழங்கும் வழக்கம் உள்ளது. ஈ என்பது 'ஈக' என்னும் பொருளில் வழங்குதல் வெளிப்படை. 'ஈ' என்று பல்லைக் காட்டாதே என்று அறிவுரை கூறுவதும் உண்டு. போ, வா, நீ, சூ, சே, சை, சோ என்பவை எல்லாம் இக்காலத்தில் அனைவரும் வழங்கும் சொற்களே.
  6. நன்னூலார் போட்ட பட்டியலில் உள்ளவை பற்றிக் கருதாமல் ஒவ்வொருவரும் எண்ணிப் பார்த்தால் சில விளக்கங்கள் கிட்டும். நன்னூலார் கூறிய சில ஓரெழுத்து ஒரு மொழிகள் இன்று வழக்கில் இல்லாதவை என்றும், வழக்கிலுள்ள சில ஓரெழுத்து ஒரு மொழிகள் நன்னூலார் கூறிய பட்டியலில் இல்லாதவை என்றும் தெளிவு ஏற்படும்.
  7. இன்னொரு வகையாகவும் பார்க்கலாம். ஆன் என்பது ஆ ஆகியது; மான் என்பது 'மா' ஆகியது; கோன் என்பது 'கோ' ஆகியது; தேன் என்பது 'தே' ஆகியது; பேய் என்பது 'பே' ஆகியது. இவையெல்லாம் காலவெள்ளத்தில் கரைந்து தேய்ந்தவை. 
  8. எட்டத்தில் போகிற ஒருவனை 'ஏய்' என அழைத்தனர். ஏய் என்பது என்னோடு கூடு, பொருந்து, சேர் என்னும் பொருளை உடையது. ஏய் என்பது 'ஏ' என வழக்கில் ஊன்றிவிட்டது. அம்பை ஏவு என்பர். ஏவுதல் என்பது 'அம்புவிடுதல்'. ஏவும் அம்பு 'ஏ' என்றாகியது. அம்பு விரைந்து செல்வது போலச் சென்று உரிய கடமை புரிபவன் ஏவலன் எனப்பட்டான். அம்புவிடும் கலையை 'ஏகலை' என்றது தமிழ்; அதில் வல்லவனை ஏகலைவன் என்று பாராட்டியது. ஏவு என்னும் சொல் 'ஏ' என்று ஆனது மட்டுமன்றி 'எய்' எனவும் ஆயிற்று. ஏவுகின்ற அம்பைப்போல் கூர்முள்ளை உடைய முள்ளம்பன்றியின் பழம்பெயர் எய்ப்பன்றி. அம்பை எய்பவர் எயினர், அவர்தம் மகளிர் எயினியர். சங்கப்புலவர்களுள் எயினனாரும் உளர். எயினியாரும் உளர். 
  9. தமிழில் ஓரெழுத்து ஒரு மொழிச் சொற்களின் பெருக்கம் நம் மொழியின் பழமை, உயிரோட்டம், பெருவழக்கு என்பனவற்றைக் கையில் கனியாகக் காட்டும். இத்தகைய தமிழ்மொழியின் சொற்களை, மொழிப்பற்றை மீட்டெடுத்தலே வழிகாட்டிகளுக்கு முதல்கடமையாய் நிற்கிறது. மொழிப்பற்றுள்ள ஒருவனே மொழியை வளர்ப்பான்; அதன் இனத்தை, பண்பாட்டைக் காப்பான்.


இயல் 1 , தமிழ் வரி வடிவ வளர்ச்சி

 தமிழ் வரி வடிவ வளர்ச்சி



சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற__________ அமைந்தது.

அ) ஓவியக்கலை 

ஆ)இசைக்கலை 

இ)அச்சுக்கலை 

ஈ) நுண்கலை

விடை:இ)இசைக்கலை


2. வளைந்த கோடுகளால் அமைந்த மிகப்பழைய தமிழ்எழுத்து அழைக்கப்படுகிறது.

அ) கோட்டெழுத்து 

ஆ) வட்டெழுத்து 

இ) சித்திர எழுத்து 

ஈ) ஓவிய எழுத்து

விடை:ஆ) வட்டெழுத்து


3. தமிழ் எழுத்துச் சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டவர்

அ) பாரதிதாசன்

ஆ) தந்தை பெரியார்

இ) வ.உ. சிதம்பரனார்

ஈ) பெருஞ்சித்திரனார்

விடை:ஆ) தந்தை பெரியார்


கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. கடைச்சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழ் எழுத்துகள்____________

அழைக்கப்பட்டன.

விடை: வட்டெழுத்துகள்


2. எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களைக் களைந்தவர்______________

விடை: வீரமாமுனிவர்


குறுவினாக்கள்

1) ஓவிய எழுத்து என்றால் என்ன?

தொடக்க காலத்தில் எழுத்து என்பது ஒலியையோ வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் வடிவமாகவே இருந்தது. இவ்வரிவடிவத்தை 'ஓவிய எழுத்து' என்பர்.



2) ஒலி எழுத்து நிலை என்றால் என்ன?

ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலையை 'ஒலி எழுத்து நிலை' என்பர்.


3) ஓலைச்சுவடிகளில் நேர்கோடுகள், புள்ளிகள் ஆகியவற்றைப் பயன்படுத்த இயலாமைக்குக் காரணம் என்ன?

நேர்கோடுகள், புள்ளிகள் ஆகியவற்றால் ஓலைச்சுவடிகள் எளிதில் சிதைந்து விடும் என்பதால், அவற்றைப் பயன்படுத்த இயலாது. 


4) வீரமாமுனிவர் மேற்கொண்ட எழுத்துச் சீர்திருத்தங்களில் எவையேனும் இரண்டினை எழுதுக.

  1. 'எ' என்னும் இடத்திற்குக் கீழ்க் கோட்டிட்டு 'ஏ' என்னும் எழுத்தை நெடிலாகவும் 'ஒ' என்னும் எழுத்திற்குச் சுழி இட்டு 'ஓ' என்னும் எழுத்தாகவும் உருவாக்கினார்.
  2. அதேபோல, ஏகார ஓகார வரிசை உயிர்மெய் நெடில் எழுத்துக்களைக் குறிக்க இரட்டைக்கொம்பு, இரட்டைக்கொம்புடன் கால் சேர்த்துப் புதிய வரிவடிவத்தை அறிமுகப்படுத்தினார்.

சிறுவினாக்கள்

1) எழுத்துச் சீர்திருத்தத்தின் தேவை குறித்து எழுதுக.

எழுத்துச் சீர்திருத்தத்தின் தேவை

ஓலைச் சுவடிகளிலும் கல்வெட்டுகளிலும் புள்ளிபெறும் எழுத்துகளை எழுதும்போது அவை சிதைந்துவிடும் என்பதால் புள்ளி இடாமல் எழுதினர். ஓலைச் சுவடிகளில் நிறுத்தற்குறிகளும் பத்தி பிரித்தலும் கிடையாது. புள்ளி இடப்பட்டு எழுதப்படும் இடங்களில் புள்ளிகள் தெளிவாகத் தெரியாத நிலையில் அவற்றின் இடம் நோக்கி மெய்யா உயிர்மெய்யா, குறிலா நெடிலா என உணர வேண்டிய நிலை இருந்தது. இதனால் படிப்பவர்கள் பெரிதும் இடருற்றனர். எனவே எழுத்துச் சீர்திருத்தம் வேண்டியதாயிற்று.


2) தமிழ் எழுத்துக்களில் ஏற்பட்ட உருவ மாற்றங்களை எழுதுக.

உருவ மாற்றம்

  1. நெடிலைக் குறிக்க ஒற்றைப்புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில் துணைக்கால் பயன்படுத்தப்படுகிறது. ஐகார உயிர்மெய்யைக் குறிக்க எழுத்துக்கு முன் இருந்த இரட்டைப்புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில் இணைக்கொம்பு பயன்படுத்தப்படுகிறது.
  2. ஔகார உயிர்மெய்யைக் குறிக்க எழுத்துக்குப் பின் இருந்த இரட்டைப்புள்ளிக்குப் பதிலாக
  3. இக்காலத்தில் கொம்புக்கால் (ள) பயன்படுத்தப்படுகிறது. குற்றியலுகர, குற்றியலிகர எழுத்துகளின்மேல் புள்ளி இடும் வழக்கம் இக்காலத்தில் வழக்கொழிந்துவிட்டது.


நெடுவினா

எழுத்துக்களின் தோற்றம் குறித்து எழுதுக.

எழுத்துகளின் தோற்றம்

  1. மனிதன் தனக்கு எதிரே இல்லாதவர்களுக்கும் பின்னால் வரும் தலைமுறையினருக்கும் தனது கருத்துகளைத் தெரிவிக்க விரும்பினான். அதற்காகப் பாறைகளிலும் குகைச்சுவர்களிலும் தன் எண்ணங்களைக் குறியீடுகளாகப் பொறித்து வைத்தான். இதுவே எழுத்து வடிவத்தின் தொடக்க நிலை ஆகும். 
  2. தொடக்க காலத்தில் எழுத்து என்பது ஒலியையோ வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாகவே இருந்தது. இவ்வரிவடிவத்தை ஓவிய எழுத்து என்பர். 
  3. அடுத்ததாக ஒவ்வொரு வடிவமும் அவ்வடிவத்துக்கு உரிய முழு ஒலியாகிய சொல்லைக் குறிப்பதாக மாறியது. அதன்பின் ஒவ்வொரு வடிவமும் அச்சொல்லின் ஓசையைக் குறிப்பதாயிற்று. இவ்வாறு ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலையை 'ஒலி எழுத்து நிலை' என்பர்.
  4. இன்று உள்ள எழுத்துகள் ஒரு காலத்தில் பொருள்களின் ஓவியமாக இருந்தவற்றின் திரிபுகளாகக் கருதப்படுகின்றன.

இயல் 1, தமிழ் மொழி மரபு

தமிழ்மொழி மரபு


சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பறவைகள் பறந்து செல்கின்றன.

அ) நிலத்தில் 

ஆ) விசும்பில்

இ) மரத்தில்

ஈ) நீரில்

விடை:ஆ) விசும்பில்


2. இயற்கையைப் போற்றுதல் தமிழர்

ஆ) பொழுது

அ) மரபு

இ) வரவு

ஈ) தகவு

விடை:அ) மரபு


3. இருதிணை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) இரண்டு + திணை 

ஆ) இரு + திணை

இ) இருவர் + திணை 

ஈ) இருந்து + திணை

விடை:

அ) இரண்டு + திணை 


4. 'ஐம்பால்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) ஐம் + பால்

ஆ) ஐந்து + பால்

இ) ஐம்பது + பால்

ஈ) ஐ + பால்

விடை:ஆ) ஐந்து + பால்


குறுவினாக்கள்

1) உலகம் எவற்றால் ஆனது?

நிலம், நீர், தீ, காற்று, வானம் ஆகிய ஐம்பூதங்களின் சேர்க்கையால் ஆனது.


2) செய்யுளில் மரபுகளை ஏன் மாற்றக்கூடாது?

திணை, பால் வேறுபாடு அறிந்து இவ்வுலகப் பொருள்களை நம் முன்னோர் எவ்வாறு கூறினாரோ, அப்படியே கூற வேண்டும். செய்யுளில், மரபுகளை மாற்றினால் பொருள் மாறிவிடும்.



இயல் 2, ஓடை

இயல் 2 

ஓடை

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பள்ளிக்குச் சென்று கல்வி___________சிறப்பு.
அ) பயிலுதல் 
ஆ) பார்த்தல் 
இ) கேட்டல்
ஈ) பாடுதல்
விடை: அ) பயிலுதல்

2. செஞ்சொல் மாதரின் வள்ளைப்பாட்டிற்கேற்ப முழவை மீட்டுவது
அ) கடல்
ஆ) ஓடை 
இ) குளம்
ஈ) கிணறு
விடை : ஆ) ஓடை

3. 'நன்செய்' - என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) நன் + செய்
ஆ) நன்று + செய்
இ) நன்மை + செய்
ஈ) நல் + செய்
விடை இ) நன்மை + செய்

4. 'நீளுழைப்பு' - என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) நீளு + உழைப்பு 
ஆ) நீண் + உழைப்பு
இ) நீள் + அழைப்பு 
ஈ) நீள் + உழைப்பு
விடை: ஈ) நீள்+உழைப்பு

5. சீருக்கு + ஏற்ப - என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அ) சீருக்குஏற்ப
ஆ) சீருக்கேற்ப
இ) சீர்க்கேற்ப
ஈ) சீருகேற்ப
விடை: ஆ) சீருக்கேற்ப

6. ஓடை + ஆட - என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அ) ஓடை ஆட
ஆ) ஓடையாட
இ) ஓடையோட
ஈ) ஓடைவாட
விடை: ஆ) ஓடையாட

குறுவினாக்கள்

1) ஓடை எவ்வாறு ஓடுவதாக வாணிதாசன் கூறுகிறார்?

'சலசல' என்று ஒலி எழுப்பியபடி கற்களில் உருண்டும் தவழ்ந்தும் நெளிந்தும் ஓடுகிறது. நன்செய், புன்செய் நிலங்களுக்கு நீர்வளம் தந்து, கொஞ்சி மகிழும் அலைகளால் கரையை மோதி, குளிர்ந்த புற்களுக்கு இன்பம் கூட்டி ஓடுகிறது.


2) ஓடை எழுப்பும் ஒலிக்கு எதனை உவமையாக வாணிதாசன் குறிப்பிடுகிறார்?

சிறந்த சொற்களைப் பேசும் பெண்கள் பாடும் வள்ளைப்பாட்டின் சிறப்புக்கேற்ப முழவை முழக்கும் முழவின் ஓசையை, ஓடை எழுப்பும் ஒலிக்கு உவமையாக வாணிதாசன் குறிப்பிடுகிறார்.


சிறு வினா

ஓடையின் பயன்களாக வாணிதாசன் கூறுவன யாவை?

  1. நன்செய், புன்செய் நிலங்களுக்கு நீர்வளம் தந்து பயிர்களைச் செழிக்கச் செய்கிறது. 
  2. அவ்வாறு விளைந்த பயிர்களின் மூலம் உணவு தந்து, நாட்டின் வறுமையைப் போக்குகிறது. 
  3. புற்களுக்கு இன்பம் சேர்கிறது. 
  4. நெஞ்சில் இரக்கம் இல்லாதவர் வெட்கப்படுமாறு இடையறாது ஓடி, தன் உழைப்பைக் கொடையாகத் தருகிறது.


இயல் 1 தமிழ் மொழி வாழ்த்து

 இயல் 1

தமிழ்மொழி வாழ்த்து

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல்
அ) வைப்பு
ஆ) கடல்
இ) பரவை 
ஈ) ஆழி
விடை: அ) வைப்பு

2. 'என்றென்றும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) என் + றென்றும்
ஆ) என்று + என்றும்
இ) என்றும் + என்றும்
ஈ) என் + என்றும்
விடை: இ) என்றும் என்றும்

3. 'வானமளந்தது' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) வான + மளந்தது
ஆ) வான் + அளந்தது
இ) வானம் + அளந்தது
ஈ) வான் + மளந்தது
விடை: இ) வானம் + அளந்தது

4. அறிந்தது + அனைத்தும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அ) அறிந்தது அனைத்தும் 
ஆ) அறிந்தனைத்தும்
இ) அறிந்ததனைத்தும்
ஈ) அறிந்துனைத்தும்
விடை:இ) அறிந்ததனைத்தும்

5. வானம் + அறிந்த என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அ) வானம் அறிந்து
ஆ) வான் அறிந்த
இ) வானமறிந்த
ஈ) வான்மறிந்த
விடை:இ) வானமறிந்த

குறுவினா

1). தமிழ் எங்குப் புகழ் கொண்டு வாழ்கிறது?

தமிழ், ஏழு கடல்களால் சூழப்பட்ட அனைத்திலும் தன் மணத்தைப் பரவச் செய்து புகழ் பெற்று வாழ்கிறது.


2). தமிழ் எவற்றை அறிந்து வளர்கிறது?

தமிழ், வானம் வரை உள்ளடங்கியுள்ள எல்லாப் பொருள்களையும் அறிந்து வளர்கிறது.


சிறு வினா

தமிழ் மொழியை வாழ்த்திப் பாரதியார் கூறும் கருத்துக்களை எழுதுக.

தமிழ்மொழி வாழ்த்து

  1. தமிழ்மொழி எக்காலத்தும் நிலைபெற்று வாழ்க! ஆகாயத்தால் சூழப்பட்ட எல்லாவற்றையும் அறிந்து உரைக்கும் வளமான தமிழ்மொழி வாழ்க! 
  2. ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும் தன் இலக்கிய மணத்தைப் பரவச் செய்து, புகழ்கொண்ட தமிழ்மொழி வாழ்க! எங்கள் தாய்மொழியாகிய தமிழ்மொழி உலகம் உள்ள வரையிலும் வாழ்க! 
  3. எங்கும் சூழ்ந்துள்ள அறியாமை இருள் நீங்கட்டும்! அதனால் தமிழ்மொழி மேன்மையுற்று உலகம் முழுதும் சிறப்படைக! 
  4. பொருந்தாத பழைய கருத்துகளால் உண்டாகும் துன்பங்கள் நீங்கித் தமிழ்நாடு ஒளிர்க! தமிழ்மொழி வாழ்க! தமிழ்மொழி வாழ்க! என்றென்றும் தமிழ்மொழி வாழ்க! 
  5. வானம்வரை உள்ளடங்கியுள்ள எல்லாப் பொருண்மைகளையும் அறிந்து மேன்மேலும் வளரும் தமிழ்மொழி வாழ்க!






குறிப்புச் செய்தி

எட்டாம் வகுப்பு மாணவர்கள் பயன்பெறும் வகையில் தனியாக இவ்வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.  படிப்படியாக மற்ற வகுப்புகளுக்கும் இதுபோல் உருவாக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.