இயல் 2
ஓடை
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. பள்ளிக்குச் சென்று கல்வி___________சிறப்பு.
அ) பயிலுதல்
ஆ) பார்த்தல்
இ) கேட்டல்
ஈ) பாடுதல்
விடை: அ) பயிலுதல்
2. செஞ்சொல் மாதரின் வள்ளைப்பாட்டிற்கேற்ப முழவை மீட்டுவது
அ) கடல்
ஆ) ஓடை
இ) குளம்
ஈ) கிணறு
விடை : ஆ) ஓடை
3. 'நன்செய்' - என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) நன் + செய்
ஆ) நன்று + செய்
இ) நன்மை + செய்
ஈ) நல் + செய்
விடை இ) நன்மை + செய்
4. 'நீளுழைப்பு' - என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) நீளு + உழைப்பு
ஆ) நீண் + உழைப்பு
இ) நீள் + அழைப்பு
ஈ) நீள் + உழைப்பு
விடை: ஈ) நீள்+உழைப்பு
5. சீருக்கு + ஏற்ப - என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அ) சீருக்குஏற்ப
ஆ) சீருக்கேற்ப
இ) சீர்க்கேற்ப
ஈ) சீருகேற்ப
விடை: ஆ) சீருக்கேற்ப
6. ஓடை + ஆட - என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அ) ஓடை ஆட
ஆ) ஓடையாட
இ) ஓடையோட
ஈ) ஓடைவாட
விடை: ஆ) ஓடையாட
குறுவினாக்கள்
1) ஓடை எவ்வாறு ஓடுவதாக வாணிதாசன் கூறுகிறார்?
'சலசல' என்று ஒலி எழுப்பியபடி கற்களில் உருண்டும் தவழ்ந்தும் நெளிந்தும் ஓடுகிறது. நன்செய், புன்செய் நிலங்களுக்கு நீர்வளம் தந்து, கொஞ்சி மகிழும் அலைகளால் கரையை மோதி, குளிர்ந்த புற்களுக்கு இன்பம் கூட்டி ஓடுகிறது.
2) ஓடை எழுப்பும் ஒலிக்கு எதனை உவமையாக வாணிதாசன் குறிப்பிடுகிறார்?
சிறந்த சொற்களைப் பேசும் பெண்கள் பாடும் வள்ளைப்பாட்டின் சிறப்புக்கேற்ப முழவை முழக்கும் முழவின் ஓசையை, ஓடை எழுப்பும் ஒலிக்கு உவமையாக வாணிதாசன் குறிப்பிடுகிறார்.
சிறு வினா
ஓடையின் பயன்களாக வாணிதாசன் கூறுவன யாவை?
- நன்செய், புன்செய் நிலங்களுக்கு நீர்வளம் தந்து பயிர்களைச் செழிக்கச் செய்கிறது.
- அவ்வாறு விளைந்த பயிர்களின் மூலம் உணவு தந்து, நாட்டின் வறுமையைப் போக்குகிறது.
- புற்களுக்கு இன்பம் சேர்கிறது.
- நெஞ்சில் இரக்கம் இல்லாதவர் வெட்கப்படுமாறு இடையறாது ஓடி, தன் உழைப்பைக் கொடையாகத் தருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக