இயல் 2
கோணக்காத்துப் பாட்டு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. வானில் கரு_________தோன்றினால் மழை பொழியும் என்பர்.
அ) முகில்
ஆ) துகில்
இ) வெயில்
ஈ) கயல்
விடை:அ) முகில்
2. முறையான உடற்பயிற்சியும் சரிவிகித உணவும் -----யும் ஓட்டிவிடும்.
அ) பாலனை
ஆ) காலனை
இ) ஆற்றலை
ஈ) நலத்தை
விடை: ஆ) காலனை
3. 'விழுந்ததங்கே' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) விழுந்த + அங்கே
ஆ) விழுந்த + ஆங்கே
இ) விழுந்தது + அங்கே
ஈ) விழுந்தது + ஆங்கே
விடை: இ) விழுந்தது + அங்கே
4. 'செத்திறந்த' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) செ + திறந்த
ஆ) செத்து + திறந்த
இ) செ + இறந்த
ஈ) செத்து + இறந்த
விடை: ஈ) செத்து + இறந்த
5. பருத்தி + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அ) பருத்தி எல்லாம்
ஆ) பருத்தியெல்லாம்
இ) பருத்தெல்லாம்
ஈ) பருத்திதெல்லாம்
விடை: ஆ) பருத்தியெல்லாம்
குறுவினா
1) கப்பல் கவிழ்ந்ததற்குக் காரணமாகக் கோணக்காத்துப் பாட்டு கூறுவது யாது?
எமனைப் போல் வந்த பெருமழையினாலும் சூழல்க்காற்றினாலும் புயல் அடித்ததால் கப்பல் கவிழ்ந்தது.
2) புயல்காற்றினால் தொண்டைமான் நாட்டில் ஏற்பட்ட அழிவு யாது?
தொண்டைமான் நாட்டில் சிறப்பாக வைக்கப்பட்ட மரங்கள் அனைத்தும் சின்னாபின்னமாக ஒடிந்து விழுந்தன.
3) கொல்லிமலை பற்றிப் பாடல் கூறும் செய்தி யாது?
சித்தர்கள் வாழும் கொல்லி மலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் புயல் அடித்தது.
சிறுவினா
1) புயல் காற்றினால் மரங்களுக்கு ஏற்பட்ட நிலைகளாகப் பாடல் குறிப்பிடும் கருத்துகள் யாவை?
- வாங்கல் என்னும் ஊரில் அழகாக வைக்கப்பட்ட தென்னம்பிள்ளைகள் எல்லாம் வீணாயின.
- தொண்டைமான் நாட்டில் சிறப்பாக வைக்கப்பட்ட மரங்கள் அனைத்தும் சின்னாபின்னமாக ஒடிந்து விழுந்தன.
2) கோணக்காற்றால் வீடுகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் யாவை?
- திரண்டு எழுந்த மேகங்களால் உருவான காற்று வேகமாக அடித்ததால் பெரியவீடுகளின் கூரைகள் எல்லாம் மொத்தமாகப் பிரிந்து சரிந்தன.
- அழகிய சுவர்களை உடைய மாடிவீடுகள் அடியோடு விழுந்தன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக