திங்கள், 26 அக்டோபர், 2020

இயல் 2, வினைமுற்று

 வினைமுற்று



சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. மாடு வயலில் புல்லை மேய்ந்தது.- இத்தொடரிலுள்ள வினைமுற்று

அ) மாடு 

ஆ) வயல்

இ) புல்

ஈ) மேய்ந்தது

விடை: ஈ) மேய்ந்தது


2. பின்வருவனவற்றுள் இறந்தகால வினைமுற்று ---

அ) படித்தான்

ஆ) நடக்கிறான் 

இ) உண்பான்

ஈ) ஓடாது

விடை: ஈ) ஓடாது


3. பின்வருவனவற்றுள் ஏவல் வினைமுற்றுச் சொல்

அ) செல்க 

ஆ) ஓடு

இ) வாழ்க 

ஈ) வாழிய

விடை: ஆ) ஓடு


சிறுவினா

1. வினைமுற்று என்றால் என்ன?

வினைமுற்று

மலர்விழி எழுதினாள். கண்ணன் பாடுகிறான். மாடு மேயும்,

இத்தொடர்களில் எழுதினாள், பாடுகிறான், மேயும் ஆகிய சொற்களைக் கவனியுங்கள்.

இச்சொற்களில் பொருள் முழுமை பெற்று விளங்குகிறது. இவ்வாறு பொருள் முற்றுப் பெற்ற வினைச்சொற்களை முற்றுவினை அல்லது வினைமுற்று என்பர். வினைமுற்று ஐந்து பால், மூன்று காலம், மூன்று இடம் ஆகிய அனைத்திலும் வரும்

2. தெரிநிலை வினைமுற்று எவற்றைக் காட்டும்?

தெரிநிலை வினைமுற்று

ஒரு செயல் நடைபெறுவதற்குச் செய்பவர், கருவி. நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகிய ஆறும் முதன்மையானவை ஆகும். இவை ஆறும் வெளிப்படுமாறு அமைவது தெரிநிலை வினைமுற்று எனப்படும்.


3. வியங்கோள் வினைமுற்று விகுதிகள் யாவை?

வியங்கோள் வினைமுற்று விகுதிகள்

க, இய, இயர், அல் என வரும்.

(எ.கா.) வாழ்க, ஒழிக, வாழியர், வாரல்

4, ஏவல் வினைமுற்றுக்கும் வியங்கோள் வினைமுற்றுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் யாவை?

ஏவல் வினைமுற்றுக்கும் வியங்கோள் வினைமுற்றுக்கும் உள்ள வேறுபாடுகள்

ஏவல் வினைமுற்று

  • முன்னிலையில் வரும்.
  • ஒருமை, பன்மை வேறுபாடு உண்டு. 
  • கட்டளைப் பொருளை மட்டும் உணர்த்தும். 
  • விகுதி பெற்றும் பெறாமலும் வரும்.

வியங்கோள் வினைமுற்று

  • இருதிணை, ஐம்பால், மூவிடங்களுக்கும் பொதுவாய் வரும்.
  • ஒருமை பன்மை வேறுபாடு இல்லை.
  • வாழ்த்துதல், வைதல், விதித்தல்,வேண்டல் ஆகிய பொருள்களை உணர்த்தும்.
  • விகுதி பெற்றே வரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக