தமிழ் வரி வடிவ வளர்ச்சி
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற__________ அமைந்தது.
அ) ஓவியக்கலை
ஆ)இசைக்கலை
இ)அச்சுக்கலை
ஈ) நுண்கலை
விடை:இ)இசைக்கலை
2. வளைந்த கோடுகளால் அமைந்த மிகப்பழைய தமிழ்எழுத்து அழைக்கப்படுகிறது.
அ) கோட்டெழுத்து
ஆ) வட்டெழுத்து
இ) சித்திர எழுத்து
ஈ) ஓவிய எழுத்து
விடை:ஆ) வட்டெழுத்து
3. தமிழ் எழுத்துச் சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டவர்
அ) பாரதிதாசன்
ஆ) தந்தை பெரியார்
இ) வ.உ. சிதம்பரனார்
ஈ) பெருஞ்சித்திரனார்
விடை:ஆ) தந்தை பெரியார்
கோடிட்ட இடத்தை நிரப்புக.
1. கடைச்சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழ் எழுத்துகள்____________
அழைக்கப்பட்டன.
விடை: வட்டெழுத்துகள்
2. எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களைக் களைந்தவர்______________
விடை: வீரமாமுனிவர்
குறுவினாக்கள்
1) ஓவிய எழுத்து என்றால் என்ன?
தொடக்க காலத்தில் எழுத்து என்பது ஒலியையோ வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் வடிவமாகவே இருந்தது. இவ்வரிவடிவத்தை 'ஓவிய எழுத்து' என்பர்.
2) ஒலி எழுத்து நிலை என்றால் என்ன?
ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலையை 'ஒலி எழுத்து நிலை' என்பர்.
3) ஓலைச்சுவடிகளில் நேர்கோடுகள், புள்ளிகள் ஆகியவற்றைப் பயன்படுத்த இயலாமைக்குக் காரணம் என்ன?
நேர்கோடுகள், புள்ளிகள் ஆகியவற்றால் ஓலைச்சுவடிகள் எளிதில் சிதைந்து விடும் என்பதால், அவற்றைப் பயன்படுத்த இயலாது.
4) வீரமாமுனிவர் மேற்கொண்ட எழுத்துச் சீர்திருத்தங்களில் எவையேனும் இரண்டினை எழுதுக.
- 'எ' என்னும் இடத்திற்குக் கீழ்க் கோட்டிட்டு 'ஏ' என்னும் எழுத்தை நெடிலாகவும் 'ஒ' என்னும் எழுத்திற்குச் சுழி இட்டு 'ஓ' என்னும் எழுத்தாகவும் உருவாக்கினார்.
- அதேபோல, ஏகார ஓகார வரிசை உயிர்மெய் நெடில் எழுத்துக்களைக் குறிக்க இரட்டைக்கொம்பு, இரட்டைக்கொம்புடன் கால் சேர்த்துப் புதிய வரிவடிவத்தை அறிமுகப்படுத்தினார்.
சிறுவினாக்கள்
1) எழுத்துச் சீர்திருத்தத்தின் தேவை குறித்து எழுதுக.
எழுத்துச் சீர்திருத்தத்தின் தேவை
ஓலைச் சுவடிகளிலும் கல்வெட்டுகளிலும் புள்ளிபெறும் எழுத்துகளை எழுதும்போது அவை சிதைந்துவிடும் என்பதால் புள்ளி இடாமல் எழுதினர். ஓலைச் சுவடிகளில் நிறுத்தற்குறிகளும் பத்தி பிரித்தலும் கிடையாது. புள்ளி இடப்பட்டு எழுதப்படும் இடங்களில் புள்ளிகள் தெளிவாகத் தெரியாத நிலையில் அவற்றின் இடம் நோக்கி மெய்யா உயிர்மெய்யா, குறிலா நெடிலா என உணர வேண்டிய நிலை இருந்தது. இதனால் படிப்பவர்கள் பெரிதும் இடருற்றனர். எனவே எழுத்துச் சீர்திருத்தம் வேண்டியதாயிற்று.
2) தமிழ் எழுத்துக்களில் ஏற்பட்ட உருவ மாற்றங்களை எழுதுக.
உருவ மாற்றம்
- நெடிலைக் குறிக்க ஒற்றைப்புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில் துணைக்கால் பயன்படுத்தப்படுகிறது. ஐகார உயிர்மெய்யைக் குறிக்க எழுத்துக்கு முன் இருந்த இரட்டைப்புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில் இணைக்கொம்பு பயன்படுத்தப்படுகிறது.
- ஔகார உயிர்மெய்யைக் குறிக்க எழுத்துக்குப் பின் இருந்த இரட்டைப்புள்ளிக்குப் பதிலாக
- இக்காலத்தில் கொம்புக்கால் (ள) பயன்படுத்தப்படுகிறது. குற்றியலுகர, குற்றியலிகர எழுத்துகளின்மேல் புள்ளி இடும் வழக்கம் இக்காலத்தில் வழக்கொழிந்துவிட்டது.
நெடுவினா
எழுத்துக்களின் தோற்றம் குறித்து எழுதுக.
எழுத்துகளின் தோற்றம்
- மனிதன் தனக்கு எதிரே இல்லாதவர்களுக்கும் பின்னால் வரும் தலைமுறையினருக்கும் தனது கருத்துகளைத் தெரிவிக்க விரும்பினான். அதற்காகப் பாறைகளிலும் குகைச்சுவர்களிலும் தன் எண்ணங்களைக் குறியீடுகளாகப் பொறித்து வைத்தான். இதுவே எழுத்து வடிவத்தின் தொடக்க நிலை ஆகும்.
- தொடக்க காலத்தில் எழுத்து என்பது ஒலியையோ வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாகவே இருந்தது. இவ்வரிவடிவத்தை ஓவிய எழுத்து என்பர்.
- அடுத்ததாக ஒவ்வொரு வடிவமும் அவ்வடிவத்துக்கு உரிய முழு ஒலியாகிய சொல்லைக் குறிப்பதாக மாறியது. அதன்பின் ஒவ்வொரு வடிவமும் அச்சொல்லின் ஓசையைக் குறிப்பதாயிற்று. இவ்வாறு ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலையை 'ஒலி எழுத்து நிலை' என்பர்.
- இன்று உள்ள எழுத்துகள் ஒரு காலத்தில் பொருள்களின் ஓவியமாக இருந்தவற்றின் திரிபுகளாகக் கருதப்படுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக