ஞாயிறு, 25 அக்டோபர், 2020

இயல் 1 தமிழ் மொழி வாழ்த்து

 இயல் 1

தமிழ்மொழி வாழ்த்து

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல்
அ) வைப்பு
ஆ) கடல்
இ) பரவை 
ஈ) ஆழி
விடை: அ) வைப்பு

2. 'என்றென்றும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) என் + றென்றும்
ஆ) என்று + என்றும்
இ) என்றும் + என்றும்
ஈ) என் + என்றும்
விடை: இ) என்றும் என்றும்

3. 'வானமளந்தது' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) வான + மளந்தது
ஆ) வான் + அளந்தது
இ) வானம் + அளந்தது
ஈ) வான் + மளந்தது
விடை: இ) வானம் + அளந்தது

4. அறிந்தது + அனைத்தும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அ) அறிந்தது அனைத்தும் 
ஆ) அறிந்தனைத்தும்
இ) அறிந்ததனைத்தும்
ஈ) அறிந்துனைத்தும்
விடை:இ) அறிந்ததனைத்தும்

5. வானம் + அறிந்த என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அ) வானம் அறிந்து
ஆ) வான் அறிந்த
இ) வானமறிந்த
ஈ) வான்மறிந்த
விடை:இ) வானமறிந்த

குறுவினா

1). தமிழ் எங்குப் புகழ் கொண்டு வாழ்கிறது?

தமிழ், ஏழு கடல்களால் சூழப்பட்ட அனைத்திலும் தன் மணத்தைப் பரவச் செய்து புகழ் பெற்று வாழ்கிறது.


2). தமிழ் எவற்றை அறிந்து வளர்கிறது?

தமிழ், வானம் வரை உள்ளடங்கியுள்ள எல்லாப் பொருள்களையும் அறிந்து வளர்கிறது.


சிறு வினா

தமிழ் மொழியை வாழ்த்திப் பாரதியார் கூறும் கருத்துக்களை எழுதுக.

தமிழ்மொழி வாழ்த்து

  1. தமிழ்மொழி எக்காலத்தும் நிலைபெற்று வாழ்க! ஆகாயத்தால் சூழப்பட்ட எல்லாவற்றையும் அறிந்து உரைக்கும் வளமான தமிழ்மொழி வாழ்க! 
  2. ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும் தன் இலக்கிய மணத்தைப் பரவச் செய்து, புகழ்கொண்ட தமிழ்மொழி வாழ்க! எங்கள் தாய்மொழியாகிய தமிழ்மொழி உலகம் உள்ள வரையிலும் வாழ்க! 
  3. எங்கும் சூழ்ந்துள்ள அறியாமை இருள் நீங்கட்டும்! அதனால் தமிழ்மொழி மேன்மையுற்று உலகம் முழுதும் சிறப்படைக! 
  4. பொருந்தாத பழைய கருத்துகளால் உண்டாகும் துன்பங்கள் நீங்கித் தமிழ்நாடு ஒளிர்க! தமிழ்மொழி வாழ்க! தமிழ்மொழி வாழ்க! என்றென்றும் தமிழ்மொழி வாழ்க! 
  5. வானம்வரை உள்ளடங்கியுள்ள எல்லாப் பொருண்மைகளையும் அறிந்து மேன்மேலும் வளரும் தமிழ்மொழி வாழ்க!






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக