சனி, 16 ஏப்ரல், 2022

பல்துறைக் கல்வி இயல் 4 சிறுவினா

 சிறுவினா



1. தமிழ்வழிக்கல்வி பற்றித் திரு வி க கூறுவனவற்றை எழுதுக.

• தமிழிலேயே கல்வி போதிக்க தமிழில் போதிய கலைகளில்லையே; சிறப்பான அறிவியல் கலைகள் இல்லையே என்று சிலர் கூக்குரலிடுகிறார்

• அவரவர் தாம் கண்ட புதுமைகளை முதல் முதலில் தம் தாய்மொழியில் வரைந்து விடுகிறார். அவை பின்னே பல மொழிகளில் பெயர்த்து எழுதப்படுகின்றன. அம்மொழிபெயர்ப்பு முறையைக் கொண்டு ஏன் தமிழ்மொழியை வளர்த்தல் கூடாது? குறியீடுகளுக்குப் பல மொழிகளினின்றும் கடன் வாங்குவது தமிழுக்கு இழுக்காகாது

• கலப்பில் வளர்ச்சி என்பது இயற்கை நுட்பம்

• தமிழை வளர்க்கும் முறையிலும் அளவிலும் கலப்பைக் கொள்வது சிறப்பு. ஆகவே தமிழ் மொழியில் அறிவுக்கலைகள் இல்லை என்னும் பழம்பாட்டை நிறுத்தி, அக்கலைகளைத் தமிழில் பெயர்த்து எழுதித் தாய்மொழிக்கு ஆக்கம் தேடுவோம் என்னும் புதுப்பாட்டைப் பாடுமாறு சகோதரர்களைக் கேட்டுக்கொள்கிறேன்

• தாய்மொழிவழி மாணாக்கர்களுக்கு அறிவுறுத்தப்படும் காலமே தமிழ்த்தாய் மீண்டும் அரியாசனம் ஏறும் காலமாகும்.



2) அறிவியல் கல்வி பற்றித் திரு.வி.க கூறுவன யாவை?

• உலக வாழ்விற்கு மிகமிக இன்றியமையாதது ‘அறிவியல்’ என்னும் அறிவுக்கலை

• உடற்கூறு, உடலோம்பு முறை, பூத பௌதிகம், மின்சாரம், நம்மைச் சூழ்ந்துள்ள செடிகொடி பறவை விலங்கு முதலியவற்றினியல், கோளியக்கம், கணிதம், அகத்திணை முதலியன வேண்டும்

• இந்நாளில் இவைகளைப் பற்றிய பொதுஅறிவாதல் பெற்றே தீரல் வேண்டும்

• புறவுலக ஆராய்ச்சிக்கு அறிவியல் கொழுகொம்பு போன்றது

• நம்முன்னோர் கண்ட பல உண்மைகள் அறிவியல் அரணின்றி இந்நாளில் உறுதி பெறுதல் அரிது

• இக்கால உலகத்தோடு உறவு கொள்வதற்கும் அறிவியல் தேவை

• ஆதலின் அறிவியல் என்னும் அறிவுக்கலை இளைஞர் உலகில் பரவல் வேண்டும்.

பல்துறைக் கல்வி இயல் 4 குறுவினா

 குறுவினா


1. இன்றைய கல்வியின் நிலை பற்றித் திரு.வி.க கூறுவன யாவை?

  • இந்நாளில் ஏட்டுக் கல்வியே நடைபெறுகிறது
  • குறிப்பிட்ட பாடங்களில் நெட்டுருச் செய்து, தேர்வில் தேறிப் பட்டம் பெற்றுத் தொழிலில் நுழைவதற்குக் கல்வி ஒரு கருவியாகக் கொள்ளப்பட்டு வருகிறது.
  • நாளடைவில் அக்கல்விக்கும் வாழ்விற்கும் தொடர்பில்லாமல் போகிறது.



2. தாய்நாடு என்னும் பெயர் எவ்வாறு பிறக்கிறது?

தாய்நாடு என்னும் பெயர் தாய்மொழியைக் கொண்டே பிறக்கிறது



3. திரு.வி.க. சங்கப் புலவர்களாகக் குறிப்பிடுபவர்களின் பெயர்களை எழுதுக

1. இளங்கோ

2. திருத்தக்கதேவர்

3. திருஞானசம்பந்தர்

4. ஆண்டாள்

5. சேக்கிழார்

6. கம்பர்

7. பரஞ்சோதி

பல்துறை கல்வி இயல் 4 ஒரு மதிப்பெண்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக



1)அறியாமையை நீக்கி அறிவை விளக்குவது______

a. விளக்கு

b. கல்வி

c. விளையாட்டு

d. பாட்டு



2)கல்விப் பயிற்சிக்குரிய பருவம்_________

a. இளமை

b. முதுமை

c. நேர்மை

d. வாய்மை



3)இன்றைய கல்வி________நுழைவதற்கு கருவியாகக் கொள்ளப்பட்டு வருகிறது

a. வீட்டில்

b. நாட்டில்

c. பள்ளியில்

d. தொழிலில்



நிரப்புக

1. கலப்பில்________உண்டென்பது இயற்கை நுட்பம் (வளர்ச்சி)

2. புறவுலக ஆராய்ச்சிக்கு________கொழுகொம்பு போன்றது (அறிவியல்)

3. வாழ்விற்குரிய இன்பத் துறைகளில் தலையாயது______இன்பம் ஆகும் (காவிய)


பொருத்துக

1. இயற்கை ஓவியம்-பத்துப்பாட்டு

2. இயற்கை தவம்-சிந்தாமணி

3. இயற்கை பரிணாமம்-கம்பராமாயணம்

4. இயற்கை அன்பு-பெரியபுராணம்

வேற்றுமை இயல் 4 சிறு வினா

 சிறுவினா


1. எழுவாய் வேற்றுமையை விளக்குக.

a. எழுவாயுடன் வேற்றுமை உருபுகள் எதுவும் இணையாமல் எழுவாய் தனித்து நின்று இயல்பான பொருளைத் தருவது எழுவாய் வேற்றுமை ஆகும்

b. எடுத்துக்காட்டு. பாவை வந்தாள்



2. நான்காம் வேற்றுமை உணர்த்தும் பொருள்கள் யாவை?

a. கொடை

b. பகை

c. நட்பு

d. தகுதி

e. அதுவாதல்

f. பொருட்டு

g. முறை

h. எல்லை



3. உடனிகழ்ச்சிப் பொருள் என்றால் என்ன?

a. ஓடு ஓடு ஆகிய மூன்றாம் வேற்றுமை உருபுகள் உடனிகழ்ச்சிப் பொருளில் வவரும்

b. எடுத்துக்காட்டு. தாயொடு குழந்தை சென்றது, அமைச்சரோடு அலுவலர்கள் சென்றனர்.

வேற்றுமை இயல் 4 ஒரு மதிப்பெண்


சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது________ஆகும்

a. எழுவாய்

b. செயப்படுபொருள்

c. பயனிலை

d. வேற்றுமை



2. எட்டாம் வேற்றுமை____வேற்றுமை என்று அழைக்கப்படுகிறது

a. எழுவாய்

b. செயப்படுபொருள்

c. விளி

d. பயனிலை



3. உடனிகழ்ச்சிப் பொருளில்________வேற்றுமை வரும்

a. மூன்றாம்

b. நான்காம்

c. ஐந்தாம்

d. ஆறாம்



4. ‘அறத்தான் வருவதே இன்பம்’ -இத்தொடரில்_______வேற்றுமை பயின்று வந்துள்ளது.

a. இரண்டாம்

b. மூன்றாம்

c. ஆறாம்

d. ஏழாம்



5. ‘மலர் பானையை வனைந்தாள்’-இத்தொடர்________பொருளைக் குறிக்கிறது

a. ஆக்கல்

b. அழித்தல்

c. கொடை

d. அடைதல்



பொருத்துக

1. மூன்றாம் வேற்றுமை-மண்ணால் குதிரை செய்தான்

2. நான்காம் வேற்றுமை-இராமனுக்குத் தம்பி இலக்குவன்

3. ஐந்தாம் வேற்றுமை-ஏவுதல் கலையில் சிறந்தவன் ஏகலைவன்

4. ஆறாம் வேற்றுமை-பாரியினது தேர்

தொகாநிலை தொகைநிலைத் தொடரியல் ஐந்து சிறு வினா

 சிறுவினா


1) தொகைநிலைத் தொடர்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

தொகைநிலைத் தொடர்கள் ஆறு வகைப்படும். அவை,

  1. வேற்றுமைத்தொகை
  2. வினைத்தொகை
  3. பண்புத்தொகை
  4. உவமைத்தொகை
  5. உம்மைத்தொகை
  6. அன்மொழித்தொகை

2) 'இரவுபகல்’ என்பது எவ்வகைத் தொடர் என விளக்குக.

  • ‘இரவுபகல்’ என்பது இரவும் பகலும் என விரிந்து பொருள் தருகிறது.
  • இதில் சொற்களுக்கு இடையிலும் இறுதியிலும் ‘உம்’ என்னும் இடைச்சொல் மறைந்து நின்று பொருள் தருவதால், இஃது உம்மைத் தொகை ஆகும்.

3) அன்மொழித்தொகையை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  • வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை ஆகிய தொகைநிலைத் தொடர்களுள் அவை அல்லாத வேறு பிற சொற்களும் மறைந்து வருவது அன்மொழித்தொகை ஆகும்.
  • எடுத்துக்காட்டு: பொற்றொடி வந்தாள். இது பொன்னாலான வளையலை அணிந்த பெண் வந்தாள் என்னும் பொருள் தருகிறது.

தொகைநிலை தொகாநிலைத் தொடர்கள் இயல் 5 ஒரு மதிப்பெண்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக


1) சொற்களுக்கு இடையே வேற்றுமை உருபு மறைந்து வருவது _____________

  1. வேற்றுமைத் தொகை
  2. உவமைத் தொகை
  3. உம்மைத் தொகை
  4. அன்மொழித் தொகை

2) ‘செம்மரம்’ என்னும் சொல் _________த்தொகை

  1. வினை
  2. பண்பு
  3. உவமை
  4. உம்மை

3) ‘கண்ணா வா!’ என்பது ______த்தொடர்

  1. எழுவாய்
  2. விளி
  3. வினைமுற்று
  4. வேற்றுமை.

பொருத்துக

  1. பெயரெச்சத் தொடர் -எழுதிய பாடல்
  2. வினையெச்சத் தொடர் -பாடி முடித்தான்
  3. வினைமுற்று தொடர்- வென்றான் சோழன்
  4. எழுவாய்த்தொடர் -கார்குழலி படித்தாள்
  5. விளித்தொடர் -புலவரே வருக