சனி, 16 ஏப்ரல், 2022

சிறுவினா சட்டமேதை அம்பேத்கர்

சிறுவினா

1) இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக அம்பேத்கர் ஆற்றிய பணிகள் யாவை?

அ)விடுதலைக்குப் பின் நேரு தலைமையில் அமைந்த அரசில் அம்பேத்கர் சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசன சபையின் தலைவராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஆ)1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 ஆம் நாள் தீர்மானத்தின்படி, அம்பேத்கர் தலைமையில் அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழு உருவாக்கப்பட்டது.
இக்குழுவில் கோபால்சாமி, அல்லாடி கிருஷ்ணமூர்த்தி, கே எம் முன்சி, சையது முகமது சாதுல்லா, மாதவராவ், டி பி கைதான் ஆகியோர் உறுப்பினர்களாக இடம் பெற்றனர்.
இக்குழு தனது அறிக்கையை 1948 பிப்ரவரி 21-இல் ஒப்படைத்தது.
இ) அதில் பல நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக் கூறுகளை இந்திய அரசியலமைப்பில் சேர்த்தார்.


2) அம்பேத்கரின் முதல் தேர்தல் வெற்றி குறித்து எழுதுக

அ)1935 ஆம் ஆண்டு இந்திய அரசாங்க சட்டப்படி பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
ஆ) ஏழை விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோர் நலனைப் பாதுகாக்கச் சுதந்திரத் தொழிலாளர் கட்சியை தொடங்கி, தேர்தலில் போட்டியிட்டார்.
இ) அவரும் போட்டியிட்ட அவரது கட்சி வேட்பாளர்கள் 15 பேரும் வெற்றி பெற்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக