குறுவினா
1) அம்பேத்கர் தன் பெயரை ஏன் மாற்றிக் கொண்டார்?
அ)பீமாராவ் ராம்ஜி சதாராவில் உள்ள பள்ளியில் படிக்கும்போது ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர் என்ற காரணத்தால் அவமதிப்புகளுக்கு ஆளானார்.
ஆ)ஆனால் மகாதேவ் அம்பேத்கர் என்ற ஆசிரியர் இவர் மீது அன்பும் அக்கறையும் கொண்டு விளங்கினார்.
இ)அந்த ஆசிரியர் மீது கொண்ட பற்றினால் தம் பெயரைப் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் என்று மாற்றிக்கொண்டார்.
2) தீண்டாமைக்கு எதிராக அம்பேத்கர் மேற்கொண்ட பணிகள் இரண்டினை எழுதுக.
அ)சமத்துவ சமுதாயத்தை அமைக்கும் நோக்கில் இவர் சமாஜ் சமாத சங்கம் என்னும் அமைப்பை உருவாக்கினார்
ஆ)1927ஆம் ஆண்டு ஒடுக்கப்பட்ட பாரதம் என்னும் இதழைத் தொடங்கினார்
இ)1930 ஆம் ஆண்டு நாசிக் கோவில் நுழைவுப் போராட்டம் நடத்தி வெற்றி கண்டார்.
3)வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்ளும் முன் அம்பேத்கர் கூறியது யாது?
"என் மக்களுக்கு நியாயமாக என்ன கிடைக்க வேண்டுமோ, அதற்காகப் போராடுவேன்.
அதே சமயத்தில் சுயராஜ்ஜியக் கோரிக்கைகளை முழு மனத்துடன் ஆதரிப்பேன்"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக