சனி, 16 ஏப்ரல், 2022

அயோத்திதாசர் சிந்தனைகள் குறுவினா

 குறுவினா


1) அயோத்திதாசரிடம் இருந்த ஐந்து பண்புகள் யாவை?

  1. நல்ல சிந்தனை
  2. சிறப்பான செயல்
  3. உயர்வான பேச்சு
  4. உவப்பான எழுத்து
  5. பாராட்டத்தக்க உழைப்பு

2) ஒரு சிறந்த வழிகாட்டி எவ்வாறு இருக்க வேண்டும் என அயோதிதாசர் கூறுகிறார்?

ஒரு சிறந்த வழிகாட்டி

  1. மக்களுள் மாமனிதராக,
  2. அறிவாற்றல் பெற்றவராக,
  3. நன்னெறியைக் கடைப் பிடிப்பவராக இருக்க வேண்டும்.

3) திராவிட மகாஜன சங்கம் எவற்றுக்காகப் போராடியது?

  1. சாலைகள் அமைத்தல்
  2. கால்வாய்கள் பராமரித்தல்
  3. குடிகளின் பாதுகாப்புக்குக் காவல்துறையினரை நியமித்தல்
  4. பொதுமருத்துவமனைகள் அமைத்தல்
  5. சிற்றூர்கள்தோறும் கல்விக்கூடங்கள் ஏற்படுத்துதல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக