சனி, 16 ஏப்ரல், 2022

அயோத்திதாசர் சிந்தனைகள் சிறுவினா

 சிறுவினா


1) அயோத்திதாசரின் இதழ்ப்பணி பற்றி எழுதுக.

  • 1907ஆம் ஆண்டு சென்னையில் ‘ஒரு பைசாத் தமிழன்‘ என்னும் வார இதழைக் காலணா விலையில் தொடங்கினார்.
  • ஓராண்டிற்குப் பின் அதன் பெயரைத் ‘தமிழன்‘ என மாற்றினார்
  • உயர்நிலையையும் இடைநிலையையும் கடை நிலையையும் பாகுபடுத்தி அறிய முடியாத மக்களுக்கு நீதி, நேர்மை, சரியான பாதை ஆகியவற்றைத் தெளிவுபடுத்துவதே இதன் நோக்கம் என்று குறிப்பிட்டார்.
  • தமிழன் இதழ் மூலம் தமிழ்நாடு மட்டுமன்றி, அயல்நாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கும் பகுத்தறிவுச் சிந்தனை, இன உணர்வு, சமூகச் சிந்தனை ஆகியவற்றை ஊட்டினார்.

2) அரசியல் விடுதலை பற்றிய அயோத்திதாசரின் கருத்துக்கள் யாவை?

  • சுயராஜ்ஜியத்தின் நோக்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதாக மட்டும் இருக்கக்கூடாது
  • மக்களின் சமூக பொருளாதார வளர்ச்சியையும் உள்ளடக்கியதாக அஃது அமைய வேண்டும்
  • மக்கள் வாழ்க்கையில் மாற்றம் உண்டானால் ஒழிய நாடு முன்னேற முடியாது என்று ஆணித்தரமாகக் கூறினார் அயோத்திதாசர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக