சனி, 16 ஏப்ரல், 2022

அயோத்திதாசர் சிந்தனைகள் நெடுவினா

 நெடுவினா


1) வாழும் முறை, சமத்துவம் ஆகியன பற்றிய அயோத்திதாசரின் சிந்தனைகளைத் தொகுத்து எழுதுக


வாழும் முறை

  • மக்கள் அனைவரும் அன்பு கொண்டு வாழவேண்டும்
  • கோபம், பொறாமை, பொய், களவு போன்றவற்றை நீக்கி வாழ வேண்டும்
  • பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யக்கூடாது
  • போதைப் பொருட்களைக் கையாலும் தொடுதல் கூடாது
  • ஒரு குடும்பத்தில் அன்பும் ஆறுதலும் நிறைந்தால், அக்குடும்பம் வாழும் ஊர் முழுவதும் அன்பும் ஆறுதலும் பெறும்; ஊர்கள் அன்பும் ஆறுதலும் பெறுமானால் நாடு முழுவதும் அன்பும் ஆறுதலும் பெற்றுத் திகழும்; இத்தகைய நாட்டில் புலியும் பசுவும் ஒரே நீர்த்துறையில் நீர் அருந்தும்.

சமத்துவம்

  • கல்வி, வேளாண்மை, காவல்துறை போன்ற அனைத்து துறைகளிலும் மக்கள் அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்க வேண்டும்
  • ஊராட்சி, நகராட்சி, சட்டமன்றம், நாடாளுமன்றம் போன்றவற்றிலும் எல்லா வகுப்பினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்.
  • இவற்றில் இந்து, பௌவுத்தர், கிறிஸ்துவர், இஸ்லாமியர், ஆங்கிலோ இந்தியர், ஐரோப்பியர் போன்ற அனைவருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக