சனி, 16 ஏப்ரல், 2022

சட்டமேதை அம்பேத்கர்

சிந்தனை வினா

பாகுபாடு இல்லாத மக்கள் சமூகம் உருவாக நமது கடமைகளாக நீங்கள் கருதுவன யாவை?

1) ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்‘ என்ற வள்ளுவரின் வரிகளை நினைவில் கொள்ள வேண்டும்
2) சகிப்புத்தன்மை, சகோதரத்துவம், நல்லிணக்கம் ஆகிய நல்ல இயல்புகளைக் கடைபிடிக்க வேண்டும்
3) அறம் சார்ந்த பண்பாட்டுக் கூறுகளை இளம்தலைமுறைக்கு உணர்த்த வேண்டும்
4) ‘ஒற்றுமையே பலம்’, ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு‘ என்னும் சிந்தனைகளை விதைக்க வேண்டும்.
5) அரசியல், சமூக, பொருளாதார சம நீதியை நிலைநாட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
6) கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
7) தீண்டாமையை எந்த வடிவிலும் அனுமதிக்கக்கூடாது
8) பொது இடங்களை பயன்படுத்துவதில் பாகுபாடு கூடாது.
9) சமத்துவ விழாக்களையும் கலப்புத் திருமணங்களையும் ஊக்குவிக்க வேண்டும்.
10)ஒடுக்கப்பட்டோருக்கான சட்டப்பாதுகாப்பு நிலைநாட்டப்பட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக