சனி, 16 ஏப்ரல், 2022

சட்டமேதை அம்பேத்கர் கற்பவை கற்றபின்

கற்பவை கற்றபின்

1) அம்பேத்கரின் பண்புகளாக நீங்கள் உணர்ந்தவற்றை எழுதுக.

அ) கல்வி கற்பதற்கு அனுமதி மறுக்கப்பட்ட அம்பேத்கர், தம் வாழ்நாள் முழுவதையும் கல்வி கற்பதிலேயே செலவிட்டார்.
ஆ) இந்து சமயம் தீண்டாமையைக் கடைப்பிடிப்பதால் புத்த மதத்தைத் தழுவினார்.
இ) அம்பேத்கருடைய கடின உழைப்பும் விடாமுயற்சியும் மிகவும் பாராட்டத்தக்கவை
ஈ) தான் சார்ந்த ஒடுக்கப்பட்ட சமூகம் மீண்டு வருவதற்கான எல்லா முயற்சிகளையும் அவர் மேற்கொண்டார்.
உ) ஒடுக்கப்பட்டோருக்கான அரசியல், சமூக, பொருளாதார விடுதலைக்கு மட்டுமன்றி இந்திய விடுதலைக்கும் பாடுபட்டார்.
ஊ)அரசியல், சமூக, பொருளாதார, சமநீதி, சமத்துவ சமுதாயம் மலர பல்வேறு சட்டக்கூறுகளை நுணுக்கமாக ஆராய்ந்து, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்தார்.


2) சமூக சீர்திருத்தத்திற்கு உழைத்த பிற தலைவர்களின் பெயர்களைப் பட்டியலிடுக.


  1. அயோத்திதாச பண்டிதர்
  2. இராமலிங்க அடிகளார்
  3. இராமகிருஷ்ண பரமஹம்சர்
  4. ஜோதிபா புலே
  5. பெரியார்
  6. ஸ்ரீ நாராயண குரு
  7. ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
  8. பாரதியார்
  9. பாரதிதாசன்
  10. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
  11. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்
  12. தர்மாம்பாள்
  13. சுவாமி விவேகானந்தர்
  14. தயானந்த சரஸ்வதி
  15. ஆத்மாராம் பாண்டுரங்
  16. மகாதேவ கோவிந்த ரானடே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக