சிந்தனை வினா
அன்றாட வாழ்வில் நாம் பிறருக்கு எத்தகைய உதவிகளைச் செய்யலாம்?
- வயதில் மூத்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களுக்குச் சிறு சிறு உதவிகளைச் செய்யலாம்.
- பார்க்கும் யாவரிடத்திலும் வணக்கம் தெரிவித்தல், சிறுபுன்னகை காட்டுதல், அன்பாக ஒரிரு வார்த்தைகள் பேசுதல் ஆகியவற்றைச் செய்யலாம்.
- எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கு வாசிக்கக் கற்றுக் கொடுக்கலாம்
- கைபேசியை இயக்க தெரியாதவர்களுக்குக் கற்றுக் கொடுக்கலாம்
- நடந்து செல்லும் பாதையில் முள் அல்லது கண்ணாடித்துண்டு கிடந்தால் அப்புறப்படுத்தலாம்.
- வழி தெரியாத வழிப்போக்கர்களுக்கு வழிகாட்டலாம்.
- பசியுடன் வந்தவர்களுக்கு தம்மிடம் உள்ள உணவைப் பகிர்ந்து கொடுக்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக