சனி, 16 ஏப்ரல், 2022

மனித யந்திரம் இயல் 8

மனித யந்திரம் கதையை மீனாட்சிசுந்தரம் கூறுவதாக மாற்றி எழுதுக

மனித யந்திரம்

     என் பெயர் மீனாட்சிசுந்தரம். நான் ஒரு கடையில் 45 ஆண்டுகளாக யந்திரம் போல வரவுசெலவுக்கணக்கு எழுதும் வேலை செய்து வருகிறேன். நான் மிகவும் சாதுவாக, உண்மையாக, நேர்மையாக இருக்க வேண்டும் என்று எண்ணுபவன். என்னை எல்லாரும் அப்பாவி என்பார்கள். எனக்குள்ளும் சிலநேரம் ஆசை துளிர்க்கும். கணக்குவழக்கைச் சரிபார்த்துக் கடையைப் பூட்டிச் சாவியை எடுத்துச் செல்பவனும் நான்தான். கடைக்கு அருகில்தான் தொடர்வண்டி நிலையமும் இருந்தது.


     ஒருநாள் இரவு கணக்குவழக்குகளை எழுதிக்கொண்டிருந்தபோது என்மனம் அலைபாய்ந்தது. பணப்பெட்டியில் இருந்த ரூபாய் 40ஐ எடுத்துக்கொண்டு செருப்புகூட அணியாமல், சாவிக்கொத்துடன் தொடர்வண்டி நிலையத்துக்கு வந்தேன். பத்தேகாலணா கொடுத்துப் பயணச்சீட்டு வாங்கிக்கொண்டு தொடர்வண்டியின் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்தேன். என்நண்பன், காவலர் கல்யாணசுந்தரத்தைக் கண்டு திடுக்கிட்டேன். குற்ற உணர்ச்சியால் என்நாக்கு வறண்டது; கண்கள் சுழன்றன. ஓரணா கொடுத்துச் சோடா வாங்கிக் குடித்தேன். வண்டி கிளம்பத் தொடங்கியது; நான் வண்டியில் இருந்து அவசர அவசரமாக இறங்கிக் கடைக்கு வந்தேன். என் பெயரில் பதினொன்றே காலணாவைப் பற்றாக எழுதிவிட்டு கடையைப் பூட்டிச் சாவியை எடுத்துக் கொண்டு முதலாளி வீட்டை நோக்கி நடந்தேன். முதலாளியிடம் சாவியை ஒப்படைத்துவிட்டு தான் செய்யவிருந்த குற்றச் செயலை எண்ணி, வெட்கத்துடன் திரும்பி நடந்தேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக