சனி, 16 ஏப்ரல், 2022

அணி இலக்கணம்

சிறு வினா

1) பிறிதுமொழிதல் அணியை விளக்கிக் எடுத்துக்காட்டுத் தருக.

இலக்கணம்: உவமையைக் கூறி பொருளைப் பெற வைப்பது பிறிது மொழிதல் அணி ஆகும்.

எடுத்துக்காட்டுப் பாடல்: கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் நாவாயும் ஓடா நிலத்து

அணி விளக்கம்: நிலத்தில் ஓடும் நெடுந்தேர் கடலில் ஓடாது. கடலில் ஓடும் நாவாய் நிலத்தில் ஓடாது. இதன் மூலம் ‘தனக்குப் பொருத்தமில்லாத இடத்தில் வெற்றி பெறுதல் இயலாது’ என்னும் கருத்து பெறப்படுகிறது. இவ்வாறு உவமையைக் கூறி பொருளைப் பெற வைப்பது பிறிதுமொழிதல் அணியாகும்.



2) வேற்றுமை அணி என்றால் என்ன?

இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையை கூறி, பிறகு அவற்றுள் ஒன்றை வேறுபடுத்திக் காட்டுவது வேற்றுமை அணி ஆகும்.



3) இரட்டுறமொழிதல் அணி எவ்வாறு பொருள் தரும்?

ஒரு சொல் அல்லது தொடர் இரண்டு பொருள் தருமாறு அமைவது இரட்டுறமொழிதல் அணி ஆகும்
எடுத்துக்காட்டு:
தாமரை-
தாமரை மலர்,
தாவுகின்ற மான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக