சனி, 16 ஏப்ரல், 2022

யாப்பு இலக்கணம் சிறுவினா இயல் 8

 சிறு வினா


1)இருவகை அசைகளையும் விளக்குக.

நேரசை

  • குறில்
  • குறில் ஒற்று
  • நெடில்
  • நெடில் ஒற்று என்றும்

நிரையசை

  • குறில் குறில்
  • குறில் குறில் ஒற்று
  • குறில் நெடில்
  • குறில் நெடில் ஒற்று என்றும் வரும்.

2) தளை என்பது யாது?

சீர்கள் ஒன்றோடு ஒன்று பொருந்துவதைத் தளை என்பர்.


3) அந்தாதி என்றால் என்ன?

  • ஒரு பாடலின் இறுதிச் சீர் அல்லது அடியின் இறுதிப்பகுதி அடுத்த பாடலின் முதல்சீர் அல்லது அடியின் முதலில் வருமாறு பாடுவது அந்தாதி ஆகும்.

4) பா எத்தனை வகைப்படும்? அவை யாவை?

பா நான்கு வகைப்படும். அவை,

  1. வெண்பா
  2. ஆசிரியப்பா
  3. கலிப்பா
  4. வஞ்சிப்பா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக