சனி, 16 ஏப்ரல், 2022

இயல் 7 விடுதலைத் திருநாள் ஒரு மதிப்பெண்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக


1) வானில் முழுநிலவு அழகாகத்________ அளித்தது

  1. தயவு
  2. தரிசனம்
  3. துணிவு
  4. தயக்கம்

2) இந்த _________முழுவதும் போற்றும்படி வாழ்வதே சிறந்த வாழ்வு

  1. வையம்
  2. வானம்
  3. ஆழி
  4. கானகம்

3) ‘சீவனில்லாமல்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________

  1. சீவ+நில்லாமல்
  2. சீவன்+ நில்லாமல்
  3. சீவன் +இல்லாமல்
  4. சீவ+ இல்லாமல்

4) 'விலங்கொடித்து’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______

  1. விலம்+கொடித்து
  2. விலம்+ ஒடித்து
  3. விலன்+ ஒடித்து
  4. விலங்கு +ஒடித்து

5) காட்டை+ எரித்து என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்________

  1. காட்டைஎரித்து
  2. காட்டையெரித்து
  3. காடுஎரித்து
  4. காடுயெரித்து

6) இதம் +தரும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _______

  1. இதந்தரும்
  2. இதம்தரும்
  3. இதத்தரும்
  4. இதைத்தரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக