குறுவினா
1)எது பெருமையைத் தரும்?
- காட்டு முயலை வீழ்த்திய அம்பினை ஏந்துவதைவிட, யானைக்குக் குறிவைத்துத் தவறிய வேலை ஏந்துவது பெருமை தரும்.
2) நண்பர்களின் இயல்பை அளந்து காட்டும் அளவுகோல் எது?
- நமக்கு வரும் துன்பத்திலும் ஒரு நன்மை உண்டு.
- அத்துன்பமே நமது நண்பர்களின் உண்மையான இயல்பை அளந்து காட்டும் அளவுகோலாகும்.
3) இவ்வுலகம் யாரால் இயங்குவதாகத் திருக்குறள் கூறுகிறது?
- பண்பு உடைய சான்றோரின் வழியில் நடப்பதால் தான் உலகம் இயங்குகிறது.
4) நட்பு எதற்கு உரியது என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்?
- நட்பு சிரித்துப் பேசி மகிழ்வதற்கு மட்டும் உரியது அன்று.
- நண்பர் தவறு செய்தால் அவரைக் கண்டித்துத் திருத்துவதற்கும் உரியது.
படத்திற்குப் பொருத்தமான திருக்குறளை எழுதுக
கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக