சனி, 16 ஏப்ரல், 2022

விடுதலைத் திருநாள் கற்பவை கற்றபின் இயல் 7

 கற்பவை கற்றபின்


நீங்கள் விரும்பும் விழா ஒன்றினைப் பற்றி ஒரு பத்தி அளவில் எழுதுக.


தைத்திருநாள்


தைப் பிறந்தால் வழி பிறக்கும்” என்பார்கள். அறுவடைத் திருநாளாக தைத் திருநாளை கொண்டாடி வருகின்றோம். தை முதல்நாள் அன்று உழவுக்கு உறுதுணையாக இருந்த கதிரவனுக்குப் பொங்கல் வைத்து வழிபடுவர். மஞ்சள், வாழை, கரும்பு நட்டு, புதுக்கோலமிட்டு, புத்தாடை அணிந்து, கதிரவனை வரவேற்கும் வகையில் அதிகாலையில் பொங்கல் வைத்து வழிபடுவர். தை இரண்டாம் நாளில் உழவர்களைச் சிறப்பிக்கும் வகையில் ‘உழவர் தினம்’ கொண்டாடப்படுகிறது. மேலும் ‘திருவள்ளுவர் தினம்’ கடைபிடிக்கப்படுகிறது. தைத் திருநாளை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன. தை மூன்றாம் நாள் காணும் பொங்கலாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக