குறுவினா
1) எம்ஜிஆர் நாடகத்துறையில் ஈடுபடக் காரணம் என்ன?
- வறுமை காரணமாக எம்ஜிஆரும் அவருடைய அண்ணனும் பள்ளிப் படிப்பைத் தொடர முடியாமல் நாடகக்குழுவில் சேர்ந்தனர்
- நாடகங்களில் சிறுசிறு வேடங்களில் நடிக்கத் தொடங்கினர்
2) திரைத்துறையில் எம்ஜிஆரின் பன்முகத் திறமைகள் யாவை?
- திரைத்துறையில் எம்ஜிஆர் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் எனப் பன்முகத் திறமை கொண்டு விளங்கினார்.
3) எம்ஜிஆரின் சமூக நலத் திட்டங்களுள் நான்கனை எழுதுக
- உழவர்களின் கடன் தள்ளுபடி
- ஏழைகளுக்கான வீட்டு வசதித் திட்டம்
- ஆதரவற்ற மகளிருக்கான திருமண உதவித்திட்டம்
- தாய் சேய் நல இல்லங்கள்
- பற்பொடி வழங்கும் திட்டம்
- முதியோருக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம்
- வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டம்
- நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு பாட நூல் வழங்கும் திட்டம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக