சிறு வினா
1) பள்ளிக் குழந்தைகளுக்குக் காலணி வழங்கும் திட்டத்துக்கு அடிப்படையாக அமைந்த நிகழ்வை எழுதுக.
- எம்ஜிஆர் ஒரு முறை மகிழ்வுந்தில் சென்னைக்கு வந்து கொண்டிருந்தார்
- அப்போது காலணிகள் இல்லாமல் மூதாட்டியும் பத்து வயதுச் சிறுமி ஒருத்தியும் சாலையின் சூடு பொறுக்க முடியாமல் நடந்து வந்ததைக் கவனித்தார்
- ஏழைஎளியவர்கள் காலணிகூட இல்லாமல் நடந்து செல்லும் நிகழ்வு அவரது மனத்தில் ஆழமாகப் பதிந்தது.
2) தமிழ்மொழியின் வளர்ச்சிக்காக எம்ஜிஆர் ஆற்றிய பணிகள் யாவை?
- தந்தை பெரியார் உருவாக்கிய எழுத்துச் சீர்திருத்தங்களுள் சிலவற்றை நடைமுறைப்படுத்தினார்
- மதுரை மாநகரில் ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டைச் சிறப்பாக நடத்தினார்
- தஞ்சையில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக