நெடுவினா
எம்ஜிஆரின் பண்புநலன்களை விளக்கி எழுதுக
- வாழ்க்கையில் உயர்நிலையை அடைந்த பின்னரும் எளிமையாக வாழ்ந்து காட்டியவர்.
- தாம் ஈட்டிய செல்வத்தை மற்றவர்களுக்கு வாரி வழங்கிய பொன்மனச் செம்மல்.
- வெறும்காலில் நடந்து சென்ற சிறுமியைக் கண்டு, பள்ளிக் குழந்தைகளுக்குக் காலணிகள் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியவர்.
- ஏழை எளிய மக்களுக்காக சமூகநலத் திட்டங்களை நடைமுறைப்படுத்தியவர்.
- எழுத்துச் சீர்திருத்தம், உலகத்தமிழ் மாநாடு, தமிழ்ப் பல்கலைக்கழகம் போன்ற தமிழ் வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட்டவர்.
- நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் எனப் பன்முகத் திறமை கொண்டு விளங்கியவர்.
- விடாமுயற்சி, கடின உழைப்பு, ஏழைகளின்பால் இரக்கம் ஆகிய நற்பண்புகள் கொண்டவர்.
- கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டைக் கடைபிடித்தவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக