சிறுவினா
1) கொங்கு மண்டலச் சதகம் கூறும் கொங்கு மண்டலத்தின் எல்லைகள் யாவை?
கொங்கு மண்டலச் சதகம் கூறும் கொங்கு மண்டலத்தின் எல்லைகளாவன:
- வடக்கு -பெரும்பாலை
- தெற்கு- பழனி மலை
- மேற்கு -வெள்ளிமலை
- கிழக்கு- மதிற்கரை
2) கரூர் மாவட்டம் பற்றிய செய்திகளைச் சுருக்கி எழுதுக.
- ‘வஞ்சிமாநகரம்’ என்னும் பெயருடையது.
- கைத்தறி ஆடைகளுக்குப் பெயர் பெற்ற மாவட்டமாக விளங்குகிறது.
- தோல் பதனிடுதல், சாயமேற்றுதல், கற்சிற்ப வேலைகள் போன்ற தொழில்கள் நடைபெறுகின்றன .
- பேருந்துக் கட்டுமானத் தொழிலின் சிகரமாகக் கரூர் விளங்குகிறது.
- நெல், சோளம், கேழ்வரகு, கம்பு, கரும்பு போன்றவை இங்குப் பயிரிடப்படுகின்றன
- கல்குவாரித் தொழிற்சாலைகளும் இங்கு உள்ளன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக