சனி, 16 ஏப்ரல், 2022

கொங்குநாட்டு வணிகம் குறுவினா இயல் 6

குறுவினா


1) மூவேந்தர்களையும் காலம் குறித்து எழுதுக

  • ‘வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு’ என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.
  • மூவேந்தர்களின் காலத்தை வரையறுத்து கூற முடியவில்லை.
  • வால்மீகி இராமாயணம், மகாபாரதம், அர்த்தசாஸ்திரம், அசோகர் கல்வெட்டு ஆகியவற்றில் மூவேந்தர்கள் குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன.
  • இதனால் இவர்கள் பன்னெடுங் காலத்திற்கு முற்பட்டவர்கள் என்பதை அறியலாம்.

2) கொங்கு நாட்டில் பாயும் ஆறுகள் யாவை?

  1. காவிரி
  2. பவானி
  3. நொய்யல்
  4. அமராவதி

3) 'தமிழ்நாட்டின் ஹாலந்து’ என்று அழைக்கப்படும் ஊர் எது? ஏன்?

  • ‘தமிழ்நாட்டின் ஹாலந்து’ என்று அழைக்கப்படும் ஊர் திண்டுக்கல் ஆகும்
  • ஏனெனில், இப்பகுதி மலர் உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக