சனி, 16 ஏப்ரல், 2022

நாட்டுப்புற கைவினை கலைகள் இயல் 5 குறுவினா

 குறுவினா


1) எவற்றையெல்லாம் கைவினைக் கலைகள் எனக் கூறுகிறோம்?

• அன்றாடப் பயன்பாட்டுக்காக அழகிய பொருள்களைத் தொழில் முறையில் உருவாக்கும் கலையைக் கைவினைக் கலை எனலாம்


2) மட்பாண்டம், சுடுமண்சிற்பம்- ஒப்பிடுக

மட்பாண்டம்

திருவையை வேகமாகச் சுழலச் செய்து அதன் நடுவில் மண்ணை வைத்து கையால் அணைத்துப் பிடித்து உருவாக்கப்படும் குடம், தோண்டி, கலயம், கடம், உண்டியல், அடுப்பு போன்றவை மண்பாண்டங்கள் ஆகும்.

சுடுமண் சிற்பம்

மண்பாண்டங்களைப் போன்றே களிமண்ணால் சிற்பங்கள் செய்து சூளையில் சுட்டு எடுக்கப்படுபவை சுடுமண் சிற்பங்கள் ஆகும்.


3) பனையோலையால் உருவாக்கப்படும் பொருட்கள் யாவை?

• கிலுகிலுப்பை

• பொம்மைகள்

• பொருள்களை வைத்துக் கொள்ள உதவும் சிறிய கொட்டான்

• பெரிய கூடை

• விசிறி

• தொப்பி

• ஓலைப்பாய்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக