காற்றுக் கருவிகள் குறித்த செய்திகளைத் தொகுத்து எழுதுக
தமிழர் காற்றுக் கருவிகள்
குழல்
இருபது விரல் நீளமுடைய மூங்கில் குழல்களில் ஏழு துளைகள் இட்டு, ஏழு சுரங்களை உண்டாக்கி மகிழ்ந்தனர் தமிழர். இதனை வேய்ங்குழல், புல்லாங்குழல் என்றும் அழைப்பர். மூங்கில்கள் மட்டுமன்றிச் சந்தனம், செங்காலி, கருங்காலி, கொன்றை, முல்லை, ஆம்பல் ஆகியவற்றிலும் குழல்கள் செய்துள்ளனர்.
கொம்பு
இறந்த மாடுகளின் கொம்புகளைப் பயன்படுத்தி ஒலி எழுப்பினர். இக்காலத்தில் பித்தளை அல்லது வெண்கலத்தால் கொம்புகள் செய்யப்படுகின்றன. வேட்டையாடும்போதும் காவல்காக்கும்போதும் கொம்பினை ஊதுவர். ஊதுகொம்பு, எக்காளம், சிங்கநாதம், துத்தரி போன்ற பலவகையான கொம்புகள் இக்காலத்தில் உள்ளன.
சங்கு
இஃது ஓர் இயற்கை கருவி. கடலில் இருந்து எடுக்கப்படுவது. வலமாகச் சுழிந்து இருக்கும் சங்கை வலம்புரிச் சங்கு என்பர். சங்கின் ஒலியைச் சங்கநாதம் என்பர். இலக்கியங்களில் பணிலம் என்று குறிப்பிடப்படுகிறது. கோவில் திருவிழாக்களின் போதும் சடங்குகளின் போதும் சங்கு முழங்கும் வழக்கம் உண்டு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக