சனி, 16 ஏப்ரல், 2022

தமிழர் மருத்துவம் இயல்3 குறுவினா

 குறுவினா



1) மருத்துவம் எப்போது தொடங்கியது?

  • தொடக்க காலத்தில் மனிதனுக்கு நோய் வந்தபோது இயற்கையாக வளர்ந்த தாவரங்களைக் கொண்டும் அவனுக்கு அருகில் கிடைத்த பொருள்களைக் கொண்டும் நோயைத் தீர்க்க முயன்று இருப்பான்.
  • தாவரங்களின் வேர் பட்டை இலை பூ கனி முதலியவற்றை மருந்தாகப் பயன்படுத்தி இருப்பான்.
  • இவ்வாறுதான் மனிதர்களுக்கும் மருத்துவத்திற்குமான தொடர்பு தொடங்கியது



2) நல்வாழ்விற்கு நாம் நாள்தோறும் செய்ய வேண்டியவை யாவை?

  • தினமும் 45 நிமிடத்தில் மூன்று கிலோ மீட்டர் நடைப்பயணம், 15 நிமிடம் யோகா, தியானம், மூச்சுப்பயிற்சி, 7 மணி நேரத் தூக்கம், 3 லிட்டர் தண்ணீர் அருந்துதல் ஆகியன அவசியம்.
  • எங்கோ விளையும் ஆப்பிளைச் சாப்பிடுவதை விட நமது ஊரில் விளையும் கொய்யா, நாவல், பப்பாளி, வாழைப்பழங்கள் ஆகியவற்றைக் காலை உணவுக்கு முன்பு சாப்பிடலாம்


3) தமிழர் மருத்துவத்தில் மருந்துகளாகப் பயன்படுவன யாவை?

“வேர்பாரு; தழைபாரு; மிஞ்சிக்கால் பற்பசெந்தூரம் பாரே” என்றனர் சித்தர்கள். வேர், தழை ஆகியவற்றால் குணமடையாத போது உலோகங்களையும் பாசாணங்களையும் சித்த மருந்துகளாகப் பயன்படுத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக