சனி, 16 ஏப்ரல், 2022

தமிழர் மருத்துவம் இயல்3 சிறுவினா

 சிறுவினா



1. நோய்கள் பெருகக் காரணம் என்ன?

a. மனிதன் இயற்கையை விட்டு விலகி வந்ததுதான் முதன்மையான காரணம்.

b. மாறிப்போன உணவு, மாசு நிறைந்த சுற்றுச்சூழல், மன அழுத்தம் இவை மூன்றும் குறிப்பிடத்தக்க காரணங்கள். சுற்றுச்சூழல் மாசு மற்றொரு காரணம்.

c. தன் உணவுக்காக வேறு எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் நிலத்தை உரங்களாலும் பூச்சிக்கொல்லிகளும் நச்சுப்படுத்தலாம் என்று அலட்சியமான எண்ணமும் மன அழுத்தமும் எது கேளிக்கை, எது குதூகலம், எது படிப்பு, எது சிந்தனை என்ற புரிதல் இல்லாமையும் கூடுதல் காரணங்களாகும்

d. நம்முடைய வாழ்வியலைச செம்மைப்படுத்துவதற்காக நாம் அறிவியல் அறிவை, மேம்பட்ட அறிவை வளர்த்தோம். ஆனால் நுண்ணறிவைத் தொலைத்துவிட்டோம்

e. இயற்கையோடு இயைந்து வாழலாம் என்ற அறிவை நாம் மறந்து விட்டோம்.



2. பள்ளிக் குழந்தைகளுக்கு மருத்துவர் கூறும் அறிவுரைகள் யாவை?

a. நோய் வந்த பின்பு மருத்துவமனைக்குச் செல்வதை விட வருமுன் காக்கும் வாழ்க்கையை வாழக் கற்றுக்கொள்ளுங்கள்.

b. சரியான உணவு, சரியான உடற்பயிற்சி, சரியான தூக்கம் ஆகிய மூன்றும் உங்களை நலமாக வாழ வைக்கும்

c. விலை உயர்ந்த உணவுதான் சரியான உணவு என்று எண்ணாதீர்கள். எளிமையாகக் கிடைக்கக்கூடிய காய்கறிகள், கீரைகள், பழங்கள், சிறுதானியங்களை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்

d. கணினித் திரையிலும் கைபேசியிலும் விளையாடுவதைத் தவிர்த்து நாள்தோறும் ஓடி ஆடி விளையாடுங்கள்

e. இரவுத் தூக்கம் மிகவும் இன்றியமையாதது. உரிய நேரத்தில் உறங்கச் செல்லுங்கள். அதிகாலையில் விழித்தெழுங்கள். உங்களை எந்த நோயும் அண்டாது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக