சனி, 16 ஏப்ரல், 2022

இயல்2 மொழியை ஆள்வோம்

விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற உன் நண்பனுக்குப் பாராட்டுக் கடிதம் எழுதுக.



பாராட்டுக் கடிதம்



சங்கரலிங்கபுரம்,

15-04-2022.


அன்புள்ள நண்பா,


     நலம். நலம் அறிய ஆவல். கடந்த வாரம் நடைபெற்ற மாநில அளவிலான நீச்சல் போட்டியில் நீ முதல் பரிசு பெற்றாய் என்பதைச் செய்தித்தாள்கள் மூலம் அறிந்தேன்; உள்ளம் மகிழ்ந்தேன். எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் நீ, உன்னுடைய தீவிரமான பயிற்சியின் காரணமாக இந்த இலக்கை எட்டி இருக்கிறாய். “தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்” என்ற வள்ளுவரின் வரிகளுக்கு எடுத்துக்காட்டாய்த் திகழ்பவன் நீ. தேசிய, உலக அளவிலான நீச்சல் போட்டிகளிலும் நீ வெற்றி பெற வேண்டும் என்று உன்னை வாழ்த்துகிறேன்.


இப்படிக்கு,

அன்புள்ள நண்பன்,

எழிலன்


உறைமேல் முகவரி

பெறுநர்

     க. தமிழன்,

     2, தென்றல் நகர்,

     மதுரை.


தமிழ் எண்கள் அறிவோம்

விடுபட்ட கட்டங்களை நிரப்புக




வண்ணம் இடப்பட்டுள்ள எண்களுக்குரிய தமிழ் எண்களை எழுதுக.


உலக ஈர நில நாள் பிப்ரவரி 2-உ

உலக ஓசோன் நாள் செப்டம்பர் 16-கசா

உலக இயற்கை நாள் அக்டோபர் 3-ங

உலக வனவிலங்கு நாள் அக்டோபர் 6-சா

உலக இயற்கைச் சீரழிவுத் தடுப்பு நாள் அக்டோபர் 5-ரு


கொடுக்கப்பட்டுள்ள தொடர்களின் வகையைக் கண்டறிந்து எழுதுக


முக்காலமும் உணர்ந்தவர்கள் நம் முன்னோர்கள். –செய்தித் தொடர்

கடமையை செய் –விழைவுத் தொடர்

பாரதியார் பாடல்களின் இனிமை தான் என்னே!-உணர்ச்சித் தொடர்

நீ எத்தனை புத்தகங்களை படித்திருக்கிறாய்?-வினாத்தொடர்


தொடர்களை மாற்றுக

எடுத்துக்காட்டு. நேற்று நம் ஊரில் மழை பெய்தது (வினாத் தொடராக மாற்றுக)

நேற்று நம் ஊரில் மழை பெய்ததா?


1)காடு மிகவும் அழகானது (உணர்ச்சித் தொடராக மாற்றுக)

காட்டின் அழகுதான் என்னே!



2)அந்தோ பூனையின் காலில் அடிபட்டு விட்டதே!(செய்தித் தொடராக மாற்றுக)

பூனையின் காலில் அடிபட்டு விட்டது



3)அதிகாலையில் துயில் எழுவது நல்லது (விழைவுத் தொடராக மாற்றுக)

அதிகாலையில் துயில் எழு.



4) முகில்கள் திரண்டால் மழை பெய்யும் அல்லவா? (செய்தித் தொடராக மாற்றுக)

முகில்கள் திரண்டால் மழை பெய்யும்



5)காட்டில் புலி நடமாட்டம் உள்ளது (வினாத் தொடராக மாற்றுக)

காட்டில் புலி நடமாட்டம் உள்ளதா?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக