சிறு வினா
1) எழுத்துகளின் பிறப்பு என்றால் என்ன?
உயிரின் முயற்சியால் உடலின் உள்ளிருந்து எழும் காற்றானது மார்பு, தலை, கழுத்து, மூக்கு ஆகிய நான்கு இடங்களுள் ஒன்றில் பொருந்தி, இதழ், நாக்கு, பல், மேல்வாய் ஆகிய உறுப்புகளின் முயற்சியினால் வேறுவேறு ஒலிகளாகத் தோன்றுகின்றன.
இதனையே எழுத்துகளின் பிறப்பு என்பர்.
2) மெய்யெழுத்துகள் எவற்றை இடமாகக் கொண்டு பிறக்கின்றன?
வல்லின மெய்கள் ஆறும் மார்பை இடமாகக் கொண்டு பிறக்கின்றன
மெல்லின மெய்கள் ஆறும் மூக்கை இடமாகக் கொண்டு பிறக்கின்றன
இடையின மெய்கள் ஆறும் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன
3) ழகர, லகர, ளகர மெய்களின் முயற்சிப் பிறப்பு பற்றி எழுதுக.
ழ்-மேல்வாயை நாக்கின் நுனி வருவதால் பிறக்கின்றது.
ல்-மேல்வாய்ப் பல்லின் அடியை நாக்கின் ஓரங்கள் தடித்து நெருங்குவதால் பிறக்கிறது.
ள்-மேல்வாயை நாக்கின் ஓரங்கள் தடித்துத் தடவுதலால் பிறக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக