ஞாயிறு, 17 ஏப்ரல், 2022

தமிழ் வரிவடிவ வளர்ச்சி இயல் 1 குறுவினா

 குறுவினா


1) ஓவிய எழுத்து என்றால் என்ன?

  • தொடக்க காலத்தில் எழுத்து என்பது ஒலியையோ வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாகவே இருந்தது.
  • இவ்வரிவடிவத்தை ஓவிய எழுத்து என்பர்.

2)ஒலி எழுத்து நிலை என்றால் என்ன?

  • ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலையை ஒலி எழுத்து நிலை என்பர்.
3) ஓலைச் சுவடிகளில் நேர்கோடுகள், புள்ளிகள் ஆகியவற்றைப் பயன்படுத்த இயலாமைக்குக் காரணம் என்ன?
  • ஓலைச்சுவடிகளில் நேர்கோடுகள், புள்ளிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது ஓலைச்சுவடி முறியும்.

4) வீரமாமுனிவர் மேற்கொண்ட எழுத்துச் சீர்திருத்தங்களில் எவையேனும் இரண்டனை எழுதுக.

  • ஏ என்னும் எழுத்திற்குக் கீழ்க்கோடிட்டு ஏ என்னும் எழுத்தை நெடிலாகவும் ஒ என்னும் எழுத்திற்குச் சுழி இட்டு ஓ என்னும் எழுத்தாகவும் உருவாக்கினார்.
  • அதேபோல ஏகார ஓகார வரிசை உயிர்மெய் நெடில் எழுத்துக்களைக் குறிக்க இரட்டைக் கொம்பு, இரட்டை கொம்புடன் கால் சேர்த்துப் புதிய வரிவடிவத்தை அறிமுகப்படுத்தினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக