சிறு வினா
1) எழுத்துச் சீர்திருத்தத்தின் தேவை குறித்து எழுதுக.
- ஓலைச்சுவடிகளிலும் கல்வெட்டுகளிலும் புள்ளி பெறும் எழுத்துக்களை எழுதும்போது அவை சிதைந்துவிடும் என்பதால் புள்ளி இடாமல் எழுதினர்.
- ஓலைச்சுவடிகளில் நிறுத்தக்குறிகளும் பத்திபிரித்தலும் கிடையாது.
- புள்ளியிடப்பட்டு எழுதப்படும் இடங்களில் புள்ளிகள் தெளிவாகத் தெரியாத நிலையில் அவற்றின் இடம் நோக்கி மெய்யா உயிர்மெய்யா, குறிலா நெடிலா என உணர வேண்டிய நிலை இருந்தது.
- இதனால் படிப்பவர்கள் பெரிதும் இடருற்றனர்
- எனவே, எழுத்துச் சீர்திருத்தம் வேண்டியதாயிற்று.
2) தமிழ் எழுத்துகளில் ஏற்பட்ட உருவ மாற்றங்களை எழுதுக.
- நெடிலைக் குறிக்க ஒற்றைப் புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில் துணைக்கால் பயன்படுத்தப்படுகிறது
- ஐகார உயிர்மெய்யைக் குறிக்க எழுத்துக்கு முன் இருந்த இரட்டைப் புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில் இணைக்கொம்பு பயன்படுத்தப்படுகிறது
- ஔகார உயிர்மெய்யைக் குறிக்க எழுத்துக்குப் பின் இருந்த இரட்டைப்புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில் கொம்புக்கால் பயன்படுத்தப்படுகிறது.
- குற்றியலுகர, குற்றியலிகர எழுத்துக்களின் மேல் புள்ளி இடுன் வழக்கம் இக்காலத்தில் வழக்கொழிந்துவிட்டது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக