நெடுவினா
எழுத்துக்களின் தோற்றம் குறித்து எழுதுக.
- மனிதன் தன் எண்ணங்களைத் தான் வாழ்ந்த குகைகளிலும் பாறைகளிலும் குறியீடுகளாகப் பொறித்து வைத்தான்.
- தொடக்க கால எழுத்து ஓவிய வடிவமாக இருந்தது. அது ஓவிய எழுத்து எனப்பட்டது.
- ஒவ்வொரு வடிவமும் ஒரு சொல்லைக் குறிப்பதாக மாறியது.
- அதன்பின் ஒவ்வொரு வடிவமும் சொல்லின் ஓசையைக் குறிப்பதாக மாறியது.
- இவ்வாறு ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலையை ஒலி எழுத்து நிலை என்பர்.
- இன்று உள்ள எழுத்துகள் ஒரு காலத்தில் பொருள்களின் ஓவியமாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக