ஞாயிறு, 17 ஏப்ரல், 2022

தமிழ் வரிவடிவ வளர்ச்சி இயல் 1 சிந்தனை வினா

 சிந்தனை வினா


தற்காலத் தமிழ்மொழியின் வளர்ச்சிக்குச் செய்ய வேண்டிய பணிகளாக நீங்கள் கருதுவனவற்றை எழுதுக.

  • புதிய கலைச்சொற்களை உருவாக்க வேண்டும்
  • பிறமொழியில் உருவாக்கப்பட்டுள்ள நல்ல இலக்கியங்களைத் தமிழ் மொழியில் மொழிபெயர்க்க வேண்டும்
  • உயர்தரமான தமிழ் இலக்கியங்களை உலகப்புகழ்பெற்ற பிற மொழிகளில் மொழிபெயர்க்க வேண்டும்
  • நல்ல இலக்கியங்களை எளிய தமிழில் எழுதிட வேண்டும்
  • இலக்கண நூல்களை எளிய வடிவில் படைத்திட வேண்டும்
  • சங்க இலக்கியங்களில் காணப்படும் உயர்ந்த அறங்களை பொதுவெளியில் பரப்பவேண்டும்.
  • தமிழர்களின் உயர்ந்த பண்பாட்டு நெறிகளை இளம் தலைமுறைக்கு எடுத்துரைக்க வேண்டும்.

தமிழை உரோமன் எழுத்துருவில் எழுதுவதால் தமிழுக்கு ஏற்படும் தீங்குகள் குறித்து விவாதிக்கவும்.

  1. அம்மா என்ற சொல்லை ammaa என்று எழுதும்போது, காலப்போக்கில் தமிழ் எழுத்துரு மறந்து போகக் கூடும்.
  2. ழகரத்தை ரோமன் எழுத்துருவில் எழுத இயலாது. ஏனெனில், ரோமன் எழுத்துக்களில் ழகரம் கிடையாது.
  3. தமிழ் மொழியின் இலக்கண அமைப்பை ரோமன் எழுத்துருவால் பூர்த்தி செய்ய இயலாது.
  4. Naan pallikkuch sendru vanthen என்று ரோமன் எழுத்துருவில் எழுதிப் படிக்கும்போது தமிழ் உணர்வோ சுவையோ உண்டாவதில்லை.
  5. தமிழை ரோமன் எழுத்துருவில் எழுதிப் பழகினால் தமிழ்மொழி அழியும். ரோமன் மொழியும் சிதையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக