இயல் 1
தமிழ்மொழி வாழ்த்து
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல்
அ) வைப்பு
ஆ) கடல்
இ) பரவை
ஈ) ஆழி
விடை: அ) வைப்பு
2. 'என்றென்றும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) என் + றென்றும்
ஆ) என்று + என்றும்
இ) என்றும் + என்றும்
ஈ) என் + என்றும்
விடை: இ) என்றும் என்றும்
3. 'வானமளந்தது' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) வான + மளந்தது
ஆ) வான் + அளந்தது
இ) வானம் + அளந்தது
ஈ) வான் + மளந்தது
விடை: இ) வானம் + அளந்தது
4. அறிந்தது + அனைத்தும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அ) அறிந்தது அனைத்தும்
ஆ) அறிந்தனைத்தும்
இ) அறிந்ததனைத்தும்
ஈ) அறிந்துனைத்தும்
விடை:இ) அறிந்ததனைத்தும்
5. வானம் + அறிந்த என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அ) வானம் அறிந்து
ஆ) வான் அறிந்த
இ) வானமறிந்த
ஈ) வான்மறிந்த
விடை:இ) வானமறிந்த
தமிழ் மொழி வாழ்த்து
வாழ்க நிரந்தரம்! வாழ்க தமிழ்மொழி! வாழிய வாழியவே!
வான மளந்த தனைத்தும் அளந்திடு வண்மொழி வாழியவே!
ஏழ்கடல் வைப்பினும் தன் மணம் வீசி இசைகொண்டு வாழியவே !
எங்கள் தமிழ் மொழி! எங்கள் தமிழ் மொழி! என்றென்றும் வாழியவே!
சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத் துலங்குக வையகமே !
தொல்லை வினை தரு தொல்லை யகன்று சுடர்க தமிழ்நா டே !
வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி யே!
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து வளர்மொழி வாழிய வே!
-பாரதியார்
தமிழ்மொழி வாழ்த்து -இப்பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்து எழுதுக
வாழ்க வாழிய வாழியவே வான வண்மொழி வைப்பினும் வையகமே வளர்மொழி வானம்
ஏழ்கடல் எங்கள் என்றென்றும்
தமிழ்மொழி தமிழ்மொழியே தன்மனம் தனைத்தும் துலங்குக தொல்லை தொல்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக