ஞாயிறு, 17 ஏப்ரல், 2022

சொற்பூங்கா இயல் 1 நெடுவினா

தமிழில் ஓரெழுத்து ஒருமொழிகளின் பெருக்கம் குறித்து இளங்குமரனார் கூறும் செய்திகளைத் தொகுத்து எழுதுக


  1. ஓரெழுத்து ஒருமொழிகள் இணைந்து புதிய கலைச்சொற்கள் உருவாகியுள்ளன. எ.கா. பூ+கா=பூங்கா, ஆ+மா=ஆமா
  2. ‘யா’ என்னும் வினா எழுத்திலிருந்து யாது, யாவர், யாவன், யாவள், யாங்கு, யாண்டு, யார், யாவை என்னும் சொற்களும் ‘மா’ என்னும் ஓரெழுத்து ஒருமொழியில் இருந்து மாநாடு, மாநிலம், மாஞாலம், மாநிறம், அரிமா, பரிமா, நரிமா, வரிமா, கரிமா என்னும் சொற்களும் உருவாகியுள்ளன.
  3. நன்னூலார் போட்ட பட்டியலில் உள்ள சில ஓரெழுத்து ஒருமொழிகள் இன்று வழக்கில் இல்லை. இன்று வழக்கிலுள்ள சில ஓரெழுத்து ஒருமொழிகள் நன்னூலார் போட்ட பட்டியலில் இல்லை.
  4. ‘ஆன்’ என்பது ‘ஆ’ ஆகியது; ‘மான்’ என்பது ‘மா’ ஆகியது; ‘கோன்’ என்பது ‘கோ’ ஆகியது. ‘தேன்’ என்பது ‘தே’ ஆகியது; ‘பேய்’ என்பது ஆகியது.
  5. ஏய்–>ஏ–>ஏவு–>ஏவலன்–>ஏகலை–>ஏகலைவன் என்றும், ஏவு–> ஏ–> எய்–> எய்ப்பன்றி–> எயினர்–> எயினியர் என்றும் ஆனது.
  6. தமிழில் ஓரெழுத்து ஒருமொழியின் பெருக்கம் நம் மொழியின் பழமை, உயிரோட்டம், பெருவழக்கு என்பனவற்றைக் கையில் கனியாகக் காட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக