சனி, 16 ஏப்ரல், 2022

அறிவுசால் அவ்வையார் இயல் 7 நெடுவினா

அறிவுசால் ஔவையார் என்னும் நாடகத்தைச் சிறுகதை வடிவில் சுருக்கமாக எழுதுக.


     ஒருமுறை அதியமான் காட்டுவளம் காணச் சென்றான். நோய்நொடியின்றி நீண்ட காலம் வாழச்செய்யும் கருநெல்லிக் கனியைப் பறித்து வந்தான். தமிழின்மீது கொண்ட பற்றால் அக்கனியை ஔவையாருக்குத் தந்தான். மற்றொருமுறை அதியமானின் முகம் வாடி இருப்பதை ஔவையார் கண்டார்; காரணம் கேட்டார். தொண்டைமான் படையெடுத்து வர இருப்பதையும், போரினால் ஏற்படும் உயிரிழப்புகளை எண்ணி வாடுவதாகவும் அதியமான் தெரிவித்தான். அதியமானின் கவலையைப் போக்க எண்ணிய ஔவையார் தொண்டைமானிடம் தூது சென்றார்.


     தமிழின் மீது அன்புடைய தொண்டைமான், ஔவையாரை மகிழ்ச்சியுடன் வரவேற்றான். தனது படைக்கலப் பெருமையை விளக்கிச் சொன்னான். அதியமான் அடிக்கடி தொடர்ந்து போர்புரிவதால், அதியமானின் கருவிகள் குருதிபடிந்தும் கூர்முனை மழுங்கியும் கொல்லனின் உலைக்களத்தில் கிடப்பதாக ஔவையார் சொன்னார். ஔவையார் கூறிய பதில் தொண்டைமானைச் சிந்திக்க வைத்தது. இதுவரை போர்க்களத்தைக் கண்டிராத தொண்டைமான், "போர் வேண்டாம்" என்று அதியமானிடம் தெரிவிக்க வேண்டுமென ஔவையாரைக் கேட்டுக் கொண்டான். போரில்லா மகிழ்ச்சியில் இந்த உலகம் திளைக்கட்டும் என்று கூறி, ஔவையார் விடைபெற்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக