சிந்தனை வினா
நாட்டு மக்களின் நாகரிக நல்வாழ்விற்கு வணிகம் தவிர்த்து வேறு எவையெல்லாம் உதவும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
- வீடுதோறும் நூலகங்கள் இருக்க வேண்டும். அவற்றை வாசிக்கும் பழக்கம் உடையவர்களாகக் குடும்ப உறுப்பினர்கள் திகழ வேண்டும்.
- ஓய்வுநேரத்தைப் பயனுள்ள வழியில் கழிக்க உதவும் கைத்தொழில் சிறந்து விளங்க வேண்டும்.
- மரபுசார்ந்த கலைகளும் திருவிழாக்களும் தொடர்ந்து நடத்தப்பட்டுப் பாதுகாக்கப்பட வேண்டும்.
- சுற்றுச்சூழலுக்குச் சிறிதும் கேடு விளைவிக்காத தொழில்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
- பண்டையத் தமிழரின் அறம்சார்ந்த வாழ்க்கைமுறை பற்றி இன்றைய இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
- இயற்கையோடு இயைந்த மற்றும் நீடித்த நிலையான வளர்ச்சியை நோக்கிய வகையில் அரசு நிர்வாகம் அமைய வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக