சிறுவினா
திருக்கேதாரத்தைச் சுந்தரர் எவ்வாறு வருணனை செய்கிறார்?
• பண்ணோடு சேர்ந்த இனிய தமிழ்ப் பாடல்களைப் பாடும் போது அதற்கு ஏற்றவாறு முதிர்ந்த மூங்கில்களால் ஆகிய புல்லாங்குழலும் முழவும் இணைந்து ஒலிக்கும்
• கண்களுக்கு இனிய குளிர்ச்சிதரும் ஒளியை உடைய பொன்வண்ண நீர்நிலைகள் வைரங்களைப் போன்ற நீர்த் திவலைகளை வாரி இறைக்கும்
• நிலத்தின் மீது நின்று கொண்டிருக்கும் மத யானைகள் மணிகளை வாரி வாரி வீசும்
• இவற்றால் எழும் ‘கிண்’ என்னும் ஒலியானது இசையாக முழங்கும்
• இத்தகைய சிறப்புகள் உடைய நகரம் திருக்கேதாரம் ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக