சனி, 16 ஏப்ரல், 2022

பல்துறைக் கல்வி இயல் 4 நெடுவினா

 நெடுவினா



காப்பியக்கல்வி குறித்து திரு.வி.க கூறும் செய்திகளைத் தொகுத்து எழுதுக.



  • வாழ்விற்குரிய இன்பத் துறைகளுள் காவிய இன்பமும் ஒன்று
  • அது தலையாயது என்றும் கூறலாம்
  • நாம் தமிழர்கள்
  • நாம் பாட்டின்பத்தை நுகர வேண்டுமேல் நாம் எங்கு செல்லல் வேண்டும்? தமிழ் இலக்கியங்களுக்கு இடையே அன்றோ?
  • தமிழில் இலக்கியங்கள் பலப்பல இருக்கின்றன. இயற்கை ஓவியம் பத்துப்பாட்டு, இயற்கை இன்பக்கலம் கலித்தொகை, இயற்கை வாழ்வில்லம் திருக்குறள், இயற்கை இன்பவாழ்வு நிலையங்கள் சிலப்பதிகாரமும் மணிமேகலையும், இயற்கைத் தவம் சிந்தாமணி, இயற்கைப் பரிணாமம் கம்பராமாயணம், இயற்கை அன்பு பெரியபுராணம், இயற்கை இறை உறையுள் தேவார திருவாசக திருவாய்மொழிகள்.
  • இத்தமிழ்க் கருவூலங்களை உன்ன உன்ன உள்ளத்தெழும் இன்ப அன்பைச் சொல்லால் சொல்ல இயலாது
  • இளைஞர்களே! தமிழ் இளைஞர்களே! பெறற்கரிய இந்த நாட்டில் பிறக்கும் பேறு பெற்றிருக்கிறீர்கள் !
  • தமிழ் இன்பத்திலும் சிறந்த இன்பம் இவ்வுலகத்தில் உண்டோ? தமிழ்க் காவியங்களைப் படியுங்கள். இன்பம் நுகருங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக