சிறுவினா
1) எச்சம் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?
பொருள் முற்றுப்பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் எச்சம் எனப்படும்.
இது பெயரெச்சம், வினையெச்சம் என இரண்டு வகைப்படும்.
2) ‘அழகிய மரம்’ – எச்சவினையை விளக்குக.
அழகிய என்னும் எச்சவினை பெயரைக்கொண்டு முடிந்துள்ளதால், இது பெயரெச்சம் ஆகும்.
3) முற்றெச்சத்தைச் சான்றுடன் விளக்குக
வள்ளி படித்தனள் மகிழ்ந்தனள்.
இதில் ‘படித்தனள்’ என்னும் சொல் ‘படித்து’ என்னும் வினையெச்சப் பொருளில் வந்து வேறொரு வினைமுற்றைக் கொண்டு முடிந்துள்ளது. இவ்வாறு ஒரு வினைமுற்று எச்ச பொருள் தந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது முற்றெச்சம் ஆகும்.
4) வினையெச்சத்தின் வகைகளை விளக்குக
வினையெச்சம் தெரிநிலை வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் என இரண்டு வகைப்படும்.
- செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் வினையெச்சம் தெரிநிலை வினையெச்சம் எனப்படும். எடுத்துக்காட்டு. எழுதி வந்தான்.
- காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாக உணர்த்தி வரும் வினையெச்சம் குறிப்புப் வினையெச்சம் எனப்படும். எடுத்துக்காட்டு. மெல்ல வந்தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக