சனி, 16 ஏப்ரல், 2022

மொழியை ஆள்வோம் இயல் 3 மொழியோடு விளையாடு

 பொருத்துக

1. காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல-தற்செயல் நிகழ்வு

2. கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போல-எதிர்பாரா நிகழ்வு

3. பசுமரத்தாணி போல-எளிதில் மனத்தில் பதிதல்

4. விழலுக்கு இறைத்த நீர் போல-பயனற்ற செயல்

5. நெல்லிக்காய் மூட்டை கொட்டினாற் போல-ஒற்றுமையின்மை


உவமைத்தொடர்களைப் பயன்படுத்தி தொடரமைக்க


1. குன்றின் மேலிட்ட விளக்கைப் போல-அண்ணல் காந்தியடிகளின் புகழ் குன்றின் மேலிட்ட விளக்கைப் போல விளங்குகிறது


2) வேலியே பயிரை மேய்ந்தது போல-வேலியே பயிரை மேய்ந்தது போலச் சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய காவலரே கையூட்டுப் பெற்றார்


3) பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல-புத்தகம் வாசிப்பதில் விருப்பமுள்ள எனக்கு, பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல நூலகர் பணி கிடைத்தது.


4) உடலும் உயிரும் போல-நானும் எனது நண்பனும் உடலும் உயிரும் போல இணைந்தே இருப்போம்



5) கிணற்றுத் தவளை போல-கிராமத்து மக்கள் கிணற்றுத் தவளை போல உலக நடப்பை அறியாமல் இருக்கின்றனர்.




மொழியோடு விளையாடு

கீழ்காணும் படம் சார்ந்த சொற்களை எழுதுக.






• சித்தமருத்துவம் சித்தர்களின் அரிய கண்டுபிடிப்பு.

• இம்மருத்துவத்தில் உணவே மருந்தாகப் பயன்படுகிறது.

• தாவரங்களின் வேர் இலை பட்டை பூ காய் கனி ஆகியவை மருந்தாகப் பயன்படுகின்றன.

• சித்தமருத்துவம் பக்க விளைவுகள் இல்லாதது.

• சித்த மருத்துவம் நோயைக் குணப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் நோய் வராமலும் தடுக்கிறது.



வட்டத்தில் உள்ள பழமொழிகளைக் கண்டுபிடித்து எழுதுக





1. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

2. முயற்சி திருவினையாக்கும்

3. சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்

4. பருவத்தே பயிர் செய்

5. அறிவே ஆற்றல்

6. சுத்தம் சோறு போடும்

7. அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு

8. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை

9. வருமுன் காப்போம்

10. பசித்துப் புசி



நிற்க அதற்குத் தக

என் பொறுப்புகள்

1. காலை மாலை உடற்பயிற்சி செய்வேன்

2. உரிய நேரத்தில் உறங்கச் செல்வேன்; உரிய நேரத்தில் விழித்தெழு வேன்



கலைச்சொல் அறிவோம்

1. நோய்-disease

2. மூலிகை-herbs

3. சிறுதானியங்கள்-millets

4. பட்டயக் கணக்கர்-auditor

5. பக்க விளைவு-side effect

6. நுண்ணுயிர் முறி-antibiotic

7. மரபணு-gene

8. ஒவ்வாமை-allergy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக