சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. புகழாலும் பழியாலும் அறியப்படுவது_________
a. அடக்கமுடைமை
b. நாணுடைமை
c. நடுவு நிலைமை
d. பொருளுடைமை
2. பயனில்லாத களர்நிலத்திற்கு ஒப்பானவர்கள்________
a. வலிமையற்றவர்
b. கல்லாதவர்
c. ஒழுக்கமற்றவர்
d. அன்பில்லாதவர்
3. வல்லுருவம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
a. வல்+ உருவம்
b. வன்மை+ உருவம்
c. வல்ல +உருவம்
d. வல்லு+ உருவம்
4. நெடுமை+ தேர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
a. நெடுதேர்
b. நெடுத்தேர்
c. நெடுந்தேர்
d. நெடுமைதேர்
5. ‘வருமுன்னர்’ எனத் தொடங்கும் குறளில் பயின்று வந்துள்ள அணி
a. எடுத்துக்காட்டு உவமையணி
b. தற்குறிப்பேற்ற அணி
c. உவமை அணி
d. உருவக அணி
திருக்குறளைச் சீர்பிரித்து எழுதுக
1) தக்கார் தகவிலாரெ ன்பது அவரவர் எச்சத்தால் காணப்படும்
தக்கார் தகவிலார் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப் படும்
2) தொடங்கற்க எவ்வினையு மெள்ளற்க முற்று மிடங்கண்ட பின் அல்லது.
தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல் லது
கோடிட்ட இடத்தை நிரப்புக.
1) வலியில் நிலைமையான் வல்லுருவம் _________புலியின் தோல் __________மேய்ந் தற்று (பெற்றம், போர்த்து)
2) விலங்கொடு _________ அனையர் ____________ கற்றாரோடு ஏனை யவர் (மக்கள், இலங்குநூல்)
சீர்களை முறைப்படுத்தி எழுதுக
யாழ்கோடு அன்ன கொளல் கணைகொடிது வினைபடு பாலால் செவ்விது அங்கு.
கணைகொடிது யாழ்கோடு செவ்விது ஆங்கு அன்ன
வினைபடு பாலால் கொளல்
படங்களுக்கு பொருத்தமான திருக்குறள்களை எழுதுக
வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின் தோல் போர்த்துமேய்ந் தற்று
கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் நாவாயும் ஓடா நிலத்து.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக