புதன், 2 டிசம்பர், 2020

கல்வி கரையில கற்பவர் நாள்சில

 நாலடியார்

எப்படிப்பட்ட நூல்களைக் கற்க வேண்டும்?


கல்வி கரையில கற்பவர் நாள்சில 

மெல்ல நினைக்கின் பிணிபல தெள்ளிதின் 

ஆராய்ந்து அமைவுடைய கற்பவே நீர் ஒழியப் 

பால் உண் குருகின் தெரிந்து.


பாடலின் பொருள்

கல்வி கரை இல்லாதது. அதைக் கற்பவர் வாழும் நாட்களோ சிலவாகும்.  மெல்ல நினைத்துத் பார்த்தால் மனிதர் தம்முடைய வாழ்நாளில் வரும் சிக்கல்கள் பலவாகும்.  பாலையும் நீரையும் கலந்து வைத்தால், அன்னப் பறவை பாலை மட்டும் தனியாக பிரித்து உணவாக்கிக் கொள்ளும். அதைப்போல, அறிவுடையோர், பல வகையான நூல்கள் இருப்பினும் நல்ல நூல்களை மட்டுமே தேர்ந்தெடுத்துக் கற்றுப் பயன்பெறுவர்.

பிணி- நோய், துன்பம், வருத்தம், சிக்கல்.

குருகு-அன்னப்பறவை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக