புதன், 2 டிசம்பர், 2020

கல்வியின் அவசியம்/பெருமை/முக்கியத்துவம்/நன்மை/சிறப்பு/இன்றியமையாமை/தேவை

 கல்வி

கல்வி கரையில கற்பவர் நாள்சில

 நாலடியார்

எப்படிப்பட்ட நூல்களைக் கற்க வேண்டும்?


கல்வி கரையில கற்பவர் நாள்சில 

மெல்ல நினைக்கின் பிணிபல தெள்ளிதின் 

ஆராய்ந்து அமைவுடைய கற்பவே நீர் ஒழியப் 

பால் உண் குருகின் தெரிந்து.


பாடலின் பொருள்

கல்வி கரை இல்லாதது. அதைக் கற்பவர் வாழும் நாட்களோ சிலவாகும்.  மெல்ல நினைத்துத் பார்த்தால் மனிதர் தம்முடைய வாழ்நாளில் வரும் சிக்கல்கள் பலவாகும்.  பாலையும் நீரையும் கலந்து வைத்தால், அன்னப் பறவை பாலை மட்டும் தனியாக பிரித்து உணவாக்கிக் கொள்ளும். அதைப்போல, அறிவுடையோர், பல வகையான நூல்கள் இருப்பினும் நல்ல நூல்களை மட்டுமே தேர்ந்தெடுத்துக் கற்றுப் பயன்பெறுவர்.

பிணி- நோய், துன்பம், வருத்தம், சிக்கல்.

குருகு-அன்னப்பறவை

கல்வி அழகே அழகு

 கல்வி அழகே அழகு

மனிதனுக்கு அழகையும் உயர்வையும் தரக்கூடிய உண்மையான அணிகலன் எது?

கற்றோர்க்கு கல்வி நலனே கலனல்லால் 

மற்றோர் அணிகலம் வேண்டாவாம் - முற்ற 

முழு மணிப் பூணுக்குப் பூண் வேண்டா யாரே 

அழகுக்கு அழகு செய்வார் 

-குமரகுருபரர்

பாடலின் பொருள்

முழுமையாக ஒளி வீசக்கூடிய மாணிக்கக் கற்களால் ஆன மாலைக்கு மேலும் அழகு கூட்ட வேறு அணிகலன் எதுவும் தேவையில்லை.  அதுபோல, கல்வி கற்றோருக்குத் தான் கற்ற கல்வியே அழகு தரக்கூடியது.  அது அல்லாமல் அவருக்கு அழகூட்ட வேறு அணிகலன்கள் எதுவும் தேவையில்லை என்பதாம்.

முற்றமுழு- ஒருபொருட்பன்மொழி
நலன்-அழகு
கலன்-அணிகலன்
அணிகலம்-ஈற்றுப் போலி
பூண்- அணிகலன்

மோனை நயம்


ற்றோர்க்கு ல்வி நலனே லனல்லால் 

ற்றோர் அணிகலம் வேண்டாவாம் - முற்ற 

முழு மணிப் பூணுக்குப் பூண் வேண்டா யாரே 

ழகுக்கு ழகு செய்வார்

எதுகை நயம்

ற்றோர்க்கு கல்வி நலனே கலனல்லால் 

ற்றோர் அணிகலம் வேண்டாவாம் - முற்ற 

முழு மணிப் பூணுக்குப் பூண் வேண்டா யாரே 

குக்கு அகு செய்வார்


குமரகுருபரர் 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.

இவர் தமிழ் மொழிக்குப் பெருமை சேர்க்கும் பல சிற்றிலக்கியங்களைப் படைத்துள்ளார்.

கந்தர் கலிவெண்பா, கயிலைக் கலம்பகம், சகலகலாவல்லி மாலை, மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ், முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் ஆகியன அவற்றுள் சிலவாகும்.

மக்களின் வாழ்வுக்குத் தேவையான நெறிகளைச் சுட்டிக் காட்டுவதால் இந்நூல் நீதிநெறிவிளக்கம் எனப் பெயர் பெற்றது. கடவுள் வாழ்த்து உட்பட 102 வெண்பாக்கள் இந்நூலில் உள்ளன.