உறவினருக்குக் கடிதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உறவினருக்குக் கடிதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 18 ஏப்ரல், 2022

உறவினருக்குக் கடிதம்

எட்டாம் வகுப்பு தமிழ்-புத்தகம் வாங்கி அனுப்புமாறு உறவினருக்குக் கடிதம் எழுதுக

உறவினருக்குக் கடிதம்

சங்கரலிங்கபுரம்,

08-04-2022.


அன்புள்ள மாமா,


     நலம். நலம் அறிய ஆவல். கடந்தவாரம் எங்கள் பள்ளியில் இலக்கிய மன்ற விழா நடந்தது. அதில் பேசிய எங்கள் தமிழாசிரியர் தாம் வாசித்த நூல்களைப் பற்றியும் அவற்றின் சிறப்புகள் பற்றியும் எங்களிடையே பகிர்ந்துகொண்டார். அதில் ஒரு புத்தகம் என்.சொக்கன் அவர்கள் எழுதிய நாவல் வடிவிலான மணிமேகலை. அது மணிமேகலைக் காப்பியத்தை நாவல் வடிவில் எளிய முறையில் விளக்குகிறதாம்! பின்பற்ற வேண்டிய வாழ்க்கை நெறிகள், வளர்க்கவேண்டிய நற்குணங்கள் ஆகியவற்றைக் கதை ஓட்டம், கதைப்பின்னல், கதை உச்சம் ஆகிய சிறப்புகளுடன் அருமையாகக் கூறுகிறதாம்!


     ஆதலால், எனக்கு நீங்கள் அந்தப் புத்தகத்தை வாங்கி விரைவு அஞ்சலில் அனுப்புமாறு வேண்டுகிறேன். அந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டு உங்களுக்கு மறுமடல் எழுதுகிறேன். அதுவரை நீங்கள் அனுப்பும் புத்தகத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பேன்.


இப்படிக்கு அன்புள்ள,

மலர் மகேந்திரன்


உறைமேல் முகவரி


பெறுநர்


திரு முகிலன்

3/14, வள்ளவர் தெரு,

மதுரை.